Thursday, September 8, 2022

ASSAM MEGALAYA RIVER KOPILI


 "அசாம் மாநிலத்தின்கோப்பிலி ஆறு"


290 கிலோமீட்டர் ஓடும் இந்த கோப்பிலி ஆறு பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறு. இது அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியுடன் சங்கமமாகிறது.

இந்த ஆறு மேகாலயா மாநிலத்தில் உற்பத்தி ஆனாலும் அசாம் மாநிலத்தின்  மலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஓடி பின்னர் பிரம்மபுத்திரா நதியுடன் சங்கமமாகிறது.

இதன் நீர்வடிப்பகுதி மிகவும் பரந்தது 16 ஆயிரத்து 420 சதுர கிலோமீட்டர் பரப்பை உடையது. 

இந்த ஆற்றில் இருக்கும் நீர் வீழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.

இந்த ஆற்றின் தண்ணீர் காமரூப் மாவட்டத்தில் 1320 எக்டர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்ய பயன்படுகிறது.

எந்த நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் இரண்டு அணைகட்டுகளில் நீர் மின் நிலையங்கள் அமைத்து உள்ளார்கள்.

இந்த நீர் மின்சக்தி நிலையங்கள் அசாமிலும் மேகாலயாவிலும் செயல்படுகின்றன.

இந்த கோப்பிலி ஆற்றில் 54 வகையான மீன் இனங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள். 

ஆனாலும் மேகாலயாவில் ஓடும் கோப்பிலி ஆற்றுநீர் உயிரியல் ரீதியாக உயிரற்ற  தண்ணீர் என்கிறார்கள்.

மேகாலயாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களின் கழிவுநீர் தான் இப்படி கோப்பிலி ஆற்று நீரை மாசுபடுத்துகின்றன என்று சொல்லுகிறார்கள்.

நண்பர்களே, இன்றைய கேள்வி, மேகாலயாவில் இருக்கும் வேறு என்ன வகை சுரங்கங்கள் ஆற்று நீரை மாசுபடுத்துகின்றன

எனது வேண்டுகோளை ஏற்று அஸ்சாம் மற்றும் மேகாலயா அசாமில் ஓடும் கோப்பிலி ஆற்றின் புகைப்படங்களை அனுப்பி வைத்த  திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர், அருமை சகோதரர் பால் உப்பாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

 

 

 

 

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...