Friday, September 16, 2022

NILE WORLDS' LONGEST RIVER - ஆஃப்ரிக்காவின் நைல்


 உலகின் நீளமான நதி 

ஆஃப்ரிக்காவின் நைல்

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

இந்தியா என்றால் கங்கை நதி என்று சொல்லுகிறோம், யுனைடட் கிங்டம் என்றால் தேம்ஸ்  நதி என்கிறோம், சீனா என்றால் யாங்க்ட்சி நதியைச் சொல்கிறோம். ரஷ்யா என்றால் வோல்கா நாதியச் சொல்லுகிறோம். அதுபோல ஆஃப்ரிகா என்றால் நைல் நதியைச் சொல்லுவார்கள்.

1. உலகின் நீளமான ஆறு

நைல் நதியை ஆஃப்ரிக்க நதி என்று சொல்லுவார்கள். ஆஃப்ரிக்காவின் முக்கிய நதி மட்டுமல்ல உலகின் மிக நீளமான நதிநைல் நதி ஓடும் மொத்த தூரம் 6650 கி.மீட்டர் என்றால் யோசித்துப் பாருங்கள். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா, 3524 கிலோமீட்டர்தான். ஆக  நைல் நதிதான் உலகத்தின் மிக நீளமான ஆறு.  

2.பதினோரு ஆப்ரிக்க நாடுகளில் பாயும் ஆறு

நைல் நதி எகிப்து உட்பட 11   ஆப்ரிக்க நாடுகளின் வழியாக ஓடுகிறது. அவை எகிப்து, எத்தியோப்பியா, எரித்தேரியா, உகாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, ருவாண்டா, சூடான், சவுத் சூடான், டான்சானியா.   

3.விக்டோரியாவில்மத்திய தரைக்கடல்

விக்டோரியா ஏரியில் உற்பத்தி ஆகி  ஓடி சகாரா பாலைவனம் வழியாக மொத்தம் 6650 கி.மீ.ஓடி மத்தியதரைக்கடலில் சங்கமமாகிறது. .

4. பாலைவனப் பரப்பு 97 சதம்

கிழக்கு, மேற்கு மற்றும் சினாய் ஆகிய மூன்று பாலைவனங்கள் எகிப்தில் உள்ளன. எகிப்தின் மொத்த நிலப் பரப்பில் 96 சதவிகிதம் பாலைவனமாக உள்ளது. சகாராவின் பாலைவனபகுதி 97 சதவிகிதம் எகிப்தில் உள்ளது.

 

6.ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தில் இப்போது பாலைவனமாக இருக்கும் இடமெல்லாம் புல்வெளியாக இருந்தது. அப்போது நிறைய மழை பெய்தது. பருவநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் எகிப்தில் இந்த பகுதிகள் எல்லாம் பாலைவனங்களாக மாறிவிட்டன.

7..நைல் நதியில் வெள்ளம் வரும் மத்திய ஜூலையை அவர்கள் தங்கள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளுகிறார்கள்.அவர்கள் தங்கள் ஆண்டினை மூண்றுப் பருவங்களாகப் பிரிக்கிறார்கள். அவை  நைல் நதியில் வெள்ளம் வந்து விவசாய நிலங்களில் நிரம்ப பாய்வது முதல் பருவம், அந்த வெள்ள நீர் அடங்கி பயிர் நடவு செய்வது இரண்டாம் பருவம், நீர் குறைந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருப்பது அறுவடைப் பருவம். ஒவ்வொரு பருவமும் நான்கு மாதங்கள் கொண்டதாக இருக்கும்.   

8. துணை நதிகள்

வெள்ளை நைல், நீல நைல் ஆகிய இரண்டும் நைல் ஆற்றின் முக்கிய துணை ஆறுகள்நீல நைல் கோடைப்பருவத்தில் 60 சதவிகித நீரைத் தருகிறது. வெளை நைல் ஆண்டு முழுவதும் தண்ணீர் தரக்கூடியது.

8. ஒரு காலத்தில் மஞ்சள்  நைல் என்ற  நதியும்  துணைநதியாக இருந்தது, தற்போது அந்த நதி வறண்டுபோய்விட்டது.

9. நைல் நதியை எகிப்து நாட்டின் கொடை என்று போற்றுகிறார்கள்எகிப்து  நாட்டின் பருத்தி உலக அளவில் பிரபலமானது.

10. சரித்திரத்துடன் முக்கிய தொடர்புடைய ஆறு. 95 சதவிகித எகிப்து நாட்டின் மக்கள் தொகை நைல் நதிக்கரையில் வசிக்கிறார்கள்.

 நண்பர்களே ! உலகின் மிகப்பெரிய ஆறு என்ற பெயர் பெற்ற நைல் நதி பாயும் எகிப்து எதனால் 97 சதவிகிதம் பாலைவனமாக மாறிவிட்டது என்று உங்களால் சொல்லமுடியுமா ? தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம், வணக்கம் !

இதுவரை 35 ஆறுகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளைப் படிக்க எனது வலைத்தளத்தை (www.gnanasuriabahavan.com) கிளிக் செய்யுங்கள். நான் எழுதி பதிவு செய்துள்ள கட்டுரைகளை பசிக்கலாம்.

 

 

No comments:

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

 #MedicinalBenefitsOfYelloBells #YellowBellsPlantUses #TecomaStansMedicalUses #HerbalMedicineYellowBells #BenefitsOfThangaArali #Traditional...