Saturday, September 3, 2022

WHY DO SOME UTHRAGHANT PEOPLE HATE HANUMAN ? - அனுமன் சிலையா வேண்டாம்

 

அனுமன் சிலையா வேண்டாம் - உத்திரகாண்ட் 

அனுமன் சிலையா ? எங்கள் கோயில்களுக்கு வேண்டாம் என்கிறார்கள்.இப்படி சொல்வது யார் தெரியுமா ? உத்ரகாண்ட்; பகுதி மக்கள்தான். ஏன் என்று கேட்கிறீர்களா ? அப்படியென்றால் நீங்கள் ராமாயண காலத்துக்குப் போக வேண்டும்.

ராம ராவண யுத்தம்  நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் போரில், இந்திரஜித் ஒரு பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது லட்சுமணன் உட்பட எல்லா வீர்ர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. நிலைமை விபரீதமானது. சஞ்சீவி மூலிகை வந்தால்தான் எல்லோர் உயிரையும் காப்பாற்ற முடியும்.

உடனே அனுமன் சஞ்சீவி மூலிகை கொண்டுவர இமயமலைக்குப் போனார். மலையில் இரவு நேரத்தில் சஞ்சீவி மூலிகையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். மலையை பெயர்த்து அப்படியே தூக்கிக் கொண்டு வந்தார்.

அனுமன், சஞ்சீவி மூலிகைகள் இருந்த சஞ்சீவி பர்வதம் மலையை அடியோடு பெயர்த்துக்கொண்டு வந்ததால்தான் லட்சுமணன் உயிர் பிழைத்தார் என்கிறது ராமாயணம் !

அந்த சஞ்சீவி பர்வதம் இருந்தது, ஜார்கெண்ட் மாநிலத்தின் துரோணகிரி   என்னும் கிராமம். அல்லது துரோணர் மலை. தங்கள் பகுதி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு போன அனுமனை மன்னிக்க தயாராக இல்லை என்கிறார்கள், இந்தப் பகுதி மக்கள்.

ராமனுக்கு கோயில் கட்டினாலும் சீதைக்குக் கோயில் கட்டினாலும் அனுமன் சிலைக்கு மட்டும் அங்கு அனுமதி இல்லையாம்.

ஆனால் இப்படி ஒரு மூலிகை இருப்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் திபெத்தின் எல்லைப் பகுதியில் உத்ரகாண்ட்  மாநிலத்தில் சஞ்சீவி மூலிகை இருக்கிறது என்று அடித்துச் செல்லுகிறார்கள்.

இந்த தெய்வீக மூலிகையைக் கண்டுபிடிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என்று ஒட்டாரமாக தேடி வருகிறது உத்ரகாண்ட் அரசு. 


No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...