Saturday, November 19, 2022

THE BEST MILK BUFFALO GUJRATH MEHSANA


மெக்சானா 
எருமை இனம்


 

மெக்சானா எருமை நம்ம ஊர் எருமையா ? எந்த ப்குதிக்கு சொந்தமானது ? அது எவ்வளவு பால் கறக்கும் ? இது ஆற்று எருமையா ? சேற்று எருமையா ? வேறு வேலைகளச் செய்ய அது உதவுமா ? இதுபற்றிய தகவல்களை எல்லாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.    

1. மெக்சானா எருமை இனம் குஜராத்தின் மெக்சானா நகருக்கு சொந்தமானது. அதற்கு அருகாமையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் சொந்தமான எருமை இனம் தான் மெக்ஸானா.

2. பெரும்பாலும் மெக்சானா எருமைகள் கருப்பு நிறமாக இருக்கும்.

சில எருமைகள் கருப்புடன் காவி நிறம் கலந்ததாக இருக்கும்.  

3. சுர்த்தி மற்றும் முர்ரா எருமை இனங்களின் கலப்பினம் தான் மெக்சானா எருமை இனம். 

4. குஜராத் மாநிலத்தின் சிறந்த எருமை இனம்  எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் மெக்சானா என்று.

5. குஜராத் மாநிலத்தில் அதிகமான பால் தரும் எருமை மாட்டினமும் மெக்சானா தான். 

6.மெக்சானா எருமைகள் நாள் ஒன்றுக்கு சராசரியா15 முதல் 20 லிட்டர் பால் தருகின்றன.  

7.பொதுவாக சேற்று எருமை இனங்களை விட ஆற்று எருமைகள் தான் அதிக பால் தருகின்றன. 

8. ஆற்று எருமைகள் ஒரு கறவைக் காலத்தில் 4500 லிட்டர் வரை கூட அதிகபட்சமாக பால் தருகின்றன.

9.குஜராத் மாநிலத்தில் உள்ள மொத்த  எருமைகளின் மெக்சானா எருமைகள் மட்டும் 38.41 சதம் உள்ளன என்பது ஆச்சரியம் தரும் செய்தி. 

10.ஆனால் இதன் உடல்வாகு முர்ரா மாட்டினத்தை விட கொஞ்சம் நீண்டதாக இருக்கும். இதன் கால்கள் அதைவிட கொஞ்சம் குறைவான வலு கொண்டதாக இருக்கும்.

11.இதன் தலை கொஞ்சம் நீண்டதாகவும் கூடுதலான எடை மொண்டதாகவும் இருக்கும்.

 12. கொம்புகள் முர்ராவைவிட  நீளமாகவும், குறைவான அளவு சுருண்டும் இருக்கும். சில சமயம் பலவிதமான வடிவத்துடனும் இருக்கும். 

13. ஒரு கறவைக் காலத்தில் 1200 முதல் 1500 கிலோ வரை பால் தரும். ஒரு கறவைக்காலம் என்பது 300 நாட்கள்.

14. ஒருமுறை கன்று போட்ட பின்னர், இரண்டாவது கன்று போட 450 முதல் 550 நாட்களாகும்.

15.  பால் உற்பத்திக்கு என்றே உருவாக்கப்பட்டது நமது மெக்ஸானா இனம், மெஹ்சானா வடக்கு குஜராத்தில் உள்ள ஒரு நகரம்.

அன்புச் சகோதரர்களே, குஜராத்தில் மெக்சானா மாட்டினத்தை விட சிறந்த பால் தரக்கூடிய மாட்டினம் ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.  

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம். நன்றி வணக்கம். 

பூமி ஞானசூரியன்.

 

#CATTLEBUFFALO

#BESTINDIANMILKBUFFALO

#MEHSANAINDIANBUFFALO

#GUJRATBUFFALO

#WATERBUFFALOMOREMILKBREED

#COUNTRYBUFFALOSUITABLEDAIRYANIMAL

#MOREMILKBUFFALO

#BUFFALOFACTSANIMALHUSBANDRY

#IMPORTANTMILKBUFFALO

 

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...