Monday, November 21, 2022

WELL ADAPTED DAIRY BUFFALO SURTI

 

சுர்த்தி எருமை இனம் 



சுர்த்தி இனம் குஜராத் மானிலத்திற்கு சொந்தமானது, ஒரு கறவைக்காலத்தில் அதிகபட்சமாக 1300 கிலோவரை பால் தரும், பாலில்  8 முதல் 12 % கொழுப்பு சத்து உடையது, அதிக செலவில்லாமல் பரமரித்து அதிக லாபம் தர உதவும் பால் எருமை.

1.குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களுக்கு சொந்தமான எருமை இனம் இது. சபர்மதி மற்றும் மாகி ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி இது.

2. ஒரு கறவைக் காலத்தில் 900 முதல் 1300 கிலோ வரை பால் தரும் எருமை இனம். 

3. 45 முதல் 50 மாதங்களில் முதல்கன்று ஈனும். முதல் கன்று ஈன்ற 400 முதல் 500 நாட்களில் இரண்டாவது கன்று போடும். 

4.சுர்த்தி எருமையின் தோல் கருப்பு அல்லது காவி நிறத்துடன் இருக்கும். உடலின் மேற்பகுதி அடர்த்தியான செம்மஞ்சள்  நிறத்தில் அல்லது சாம்பல் நிறம் கலந்த வெள்ளி நிறமாக இருக்கும். 

5.இது நீளமான தலையுடனும் தெறிப்பான கண்களுடனும் இருக்கும். கொம்புகள் நடுத்தரமான நீளத்திலும், தட்டையான அரிவாள் வடிவத்திலும் இருக்கும்.  

6. சுர்த்தியின் பாலிலும் அதிகமான கொழுப்பு சத்து அடங்கியுள்ளது. எட்டு முதல் 12 சதம் கொழுப்பு சத்து உள்ளது இதன்பாலில். 

 7. ராஜஸ்தானின் தென்பகுதியில் உள்ள உதய்ப்பூர், பில்வாராராஜ் சாமந்த்சிட்டோர்கார்மற்றும் துங்கார்ப்பூர் மாவட்டங்களில் இந்த சுர்த்தி எருமைகள் பரவலாக உள்ளன.

9. நடுத்தரமான உடல் அமைப்பு, மற்றும் தொடர்ந்து  கன்றுகள் ஈனும் பண்பும் இருப்பதால் நகர்ப்புறங்களில் கூட இதனை விரும்பி வளர்க்கிறார்கள். 

10.அதிக தீவனம் இல்லாமலும், பசும்புல் இல்லாமலும், அதிக செலவில்லாமலும் வளர்க்க முடியும். அதனால் விவசாயிகள் இதனை விரும்புகிறார்கள்.  

சுர்த்தி ன எருமைகள் பற்றி இன்னும் கூடுதலான சுவாரஸ்யமான தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம். 

பூமி ஞானசூரியன்

 

#MILKBUFFALOSURTHI

#GUJARATHBUFFALO

#DAIRYANIMAI

#SURTIBUFFALOPRICE

#SURTIBUFFALOCHARACTERISTICS

#SURTIBUFFALOIMAGES

#SURTIMILKPERDAY

#SURTIBUFFALOPHOTOS

#SURTIBUFFALOUSES

#MILKCATTLE


No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...