Sunday, April 20, 2025

கடவுளைப் பார்ப்பது எப்படி - HOW TO SEE THE GOD

 

கடவுளைப்

பார்ப்பது எப்படி

 

SUFI SAINT OF SUFISM FROM PERSIA 

ஒரு ஊரில் ஒரு சூஃபி ஞானி இருந்தார். அவரிடம்  நிறைய சீடர்கள் இருந்தார்கள். சூஃபி ஞானிகள் என்றால் இஸ்லாமிய ஞானிகள். கடவுளால் அனுப்பப்பட்டு இறைத் தூதர்கள் என்றும் நம்புகிறார்கள். சிறப்பான தெய்வீக சக்தி உடையவர்கள் தான் சூஃபி ஞானிகள். 

தியானத்தால் உண்மையையும் கடவுளையும் காணலாம் என்பதை சூஃபியிசம் எனும் மாயாவாதம் என்கிறார்கள்.

அந்த சூஃபி ஞானியைப் பார்க்க ஒரு நாள் அந்த நாட்டு அரசன் வந்திருந்தான்

அந்த ஞானி அந்த நாட்டு அரசனை வரவேற்று “என்ன விசயம்’னு கேட்டார்

அந்த அரசன் ரொம்பவும் பணிவா சொன்னார் “நான் கடவுளைப் பார்க்கணும் அவரோட பேசணும்.. அதுக்கு உங்களாலதான் உதவ முடியும்.

கொஞ்சநேரம் யோசித்தார் அந்த ஞானி. அதுக்குப் பிறகு  சொன்னார் “நாளைக்கு வாங்க.. நாம் அதப் பற்றி விரிவாப் பேசலாம் என்றார் அந்த சூஃபி ஞானி

அடுத்த நாள் அந்த ராஜா, ஞானியைப் பார்க்க வந்தார். அப்போ ஞானி அவரை சந்திக்கத் தயாரா இருந்தார்

அரசன் வந்ததும் அவங்கிட்ட ஒரு திருவோட்டை அவன் கையில் கொடுத்தார்.ராஜாவுக்கு ஒண்ணும் புரியல. ஆன்னாலும் ராஜா அதை வாங்கிக் கொண்டார்.

“இதை நான் என்ன செய்ய வேண்டும், எதுக்காக இதை என் கையில தர்றிங்க ?” என்றார் ராஜா

சூஃபி ஞானி சொன்னார் “இன்னையிலிருந்து ஒரு வாரம், அதாவது, ஏழு நாளைக்கு இங்க தங்கி இருக்கப் போறிங்க… தினமும் காலையில் எழுத்திருப்பிங்க..இந்த திருவோட்டை எடுத்துகிறீங்க. பக்கத்துல இருக்கும் எதாச்சும் ஒரு கிராமத்துக்கு போயி பிச்சை எடுத்துகிட்டு வற்றிங்க. அப்படி பிச்சை எடுதுட்டு வந்த பிறகுதான் உங்களுக்கு சாப்பாடு. ஒரு நாளைக்கு ஒரு கிராமன்னு போயி பிச்சை எடுக்கனும். இப்படி ஏழு நாள் முடிஞ்ச பிற்பாடு நாம் கடவுளை எப்படி பாக்கறதுன்னு பேசலாம் “ அப்படீன்னு சொன்னார் அந்த சூஃபி ஞானி

இதை கேட்டதும் அரசனுக்கு அதிர்ச்சி ! அவனுக்கு என்ன சொல்றதுன்னு புரியல,  அவன் சொன்னான்.

“ வேணும்னா  நான் வேறு தேசத்து கிராமங்களில் போய் பிச்சை எடுக்கிறனே.. எடுத்து அதையே சாப்பிடுகிறேன் என் சொந்த  நாட்டு கிராமங்களிலேயே நம்மை ஜனங்ககிட்ட பிச்சை எடுக்கறதுன்னா,  எனக்கு வெட்கமாக இருக்கு“ ன்னு சொன்னான் அரசன்.

அப்போ சூஃபி ஞானி “ கண்டிப்பா நீங்க உங்க நாட்டு கிராமங்கள்ள தான்  பிச்சை எடுக்கணும். அது உங்களால முடியாதுன்னா நீங்க அரண்மனைக்கு நீங்க திரும்பப் போகலாம்.. அப்புறம் நீங்க.. கடவுளை பாக்கணும், பேசணும்னு வரக் கூடாது “ என்று சொன்னார். ஒரு வழியாக சூஃபி ஞானி சொன்னதுக்கு ராஜா சரி என்று ஒத்துக் கொண்டார்.

அடுத்த நாளே அந்த ராஜா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்குப் போனார் மறக்காமல் பிச்சை எடுக்கும் திருவோட்டை எடுத்துக் கொண்டு போனார்.

அண்ணைக்கு ராஜா பிச்சையாக எடுத்துக் கொண்டு வந்த சாப்பாட்டை மதியத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டார். ஏழு நாட்கள் முடிந்தது சூஃபி ஞானியைப் பார்க்க வந்தார் அரசன்.

“இப்போது நீங்கள் கடவுள் பற்றி என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அதைக் கேளுங்க “ என்றார் சூஃபி ஞானி

அப்போது அந்த அரசன் சொன்னான் “இந்த ஏழு நாட்களுக்கு முன்னால் நான் உங்களிடம் என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கான பதில் இந்த ஏழு நாட்களில் எனக்குக் கிடைச்சுட்டது”

“அரசனாக இருக்கும்போது நான் அறியாமையில  இருந்தேன்.. அப்போ  எனக்குக் கிடைக்காத அனுபவம் பிச்சைப்பத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் போது எனக்குக் கிடைச்சது”

அரசனாக இருந்தபோது என்னிடம் மித மிஞ்சி இருந்த  நான் எண்ற ஆணவம், ஆகங்காரம்,  அனைத்தும் அடியோடு நோறுங்கிப்போயிட்டது. தினமும் நூத்துக் கணக்கான என்னொட பிரஜைகள் என்ன வேடிக்கை பாப்பாங்க. ஏழை எளிய ஜனங்க எல்லாம் எனக்கு பிச்சை போட்டாங்க.. நானும் பிச்சை கேட்டு போனது எல்லாம் சராசரி மக்கள். நீங்க சொன்ன மாதிரி என்னோட அரண்மனை பணியாளர்கள் யாரையும் கூட்டிகிட்டுப் போகல. நிறைய பேருக்கு நான் யாருன்னு தெரியல. பிச்சைக்காரன் அப்பிடின்னுதான் எனக்கு பிச்சை போட்டாங்க.

ஆணவம் என்னைவிட்டு முழுமையாக விலகிவிட்டது. அதனால் என் மனம் முழுக்க அமைதியும் ஆனந்தமும் நிரம்பி வழிகிறது. இனி எனக்கு சந்தேகம் என்று கேட்க எதுவும் இல்லை.

எனக்கு சரியான வழிகாட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் தாங்களுக்கு நன்றி என்று சொல்லிவிட்டு சூஃபி ஞானியிடம் விடைபெற்றான் அந்த அரசன்.

இந்த ஏழு நாள்ள அந்த ராஜா புது ஜென்மம் எடுத்த மாதிரி இருந்தது. ஒரு மனுஷனோட தலைக்கனம், ஆணவம், அகங்காரம் இதெல்லாம் அவங்கிட்ட காணாமப் போச்சின்னா என்ன நடக்கும் ? மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க முக்கியமா 10 நன்மைகள் நடக்கும்னு சொல்றாங்க. அது என்னென்னன்னு பாக்கலாம்.

1.நிறைய பேசுவது குறைஞ்சு போகும்.

2.அடுத்தவங்க சொல்றத பொறுமையா கேக்க முடியும்.

3.கோபம் குறைஞ்சிபோகும்.

4.பாதுகாப்பில்லாதமாதிரி இருக்கும் உணர்வு இருக்காது.

5. தன்னோட தவறுகளை எதுன்னு சுலபமா தெரிஞ்சிக்க முடியும்.

6. நம்மோட நிறையபேர் சஹஜமா பழக ஆரம்பிப்பாங்க.

7. அடுத்தவங்களை சகஜமா புரிஞ்சிக்க முடியும்.

8. உண்மையா நாம் என்ன நினைக்கிறோம் அப்படிங்கறதை வெளிப்படையா பேச முடியும்.

9. நம்மபேர்ல நிறையபேர் நம்பிக்கை வைப்பாங்க.

10. நமது முன்னேற்றத்துக்கு வேண்டிய புதியசெய்திகள் நிறைய நம்மத் தேடிவர ஆரம்பிக்கும்.

இன்னொரு முக்கியமான சமாச்சாரம், எங்கயாச்சும் போய் பிசை எடுத்தாதான் நம்ம ஆணவம் அகங்காரம் நம்ம ஈகோ குறையும்னு இல்ல.

வேற என்ன செஞ்சா இது குறையும்னு கமெண்ட் பகுதியில எழுதுங்க.

நன்றி, வணக்கம்.

பூமி ஞானசூரியன்

 

2 comments:

Yasmine begam thooyavan said...

அருமையான கதை. அறிவுபூர்வமாக சிந்திக்க வைத்தது.
அடுத்தவங்க உணர்வுகளை புரிந்து நடந்தாலே ஆணவம் குறையும். அன்பும், பழகும் பண்பும் இருகிறவனுக்கு ஆணவம் இருக்காது. இது பிறப்பிலேயே மட்டும் இல்லாமல் அன்னையின் வளர்ப்பிலே வரக்கூடும். நன்றி.
A..Yasmine begam thooyavan.

Anonymous said...

அருமையான பதிவு

தங்க அரளி என்ன நோய்களை குணப்படுத்தும் ? MEDICINAL PROPERTIES OF YELLOW BELLS

  தங்க அரளி  என்ன நோய்களை  குணப்படுத்தும் ? தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது...