Tuesday, July 1, 2025

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

 நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்  குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /


 WHAT I LEARNED IN BRAZIL / HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES / BHUMII GNANASOORIAN

நபார்டு வங்கியும் பிரேசில் நாட்டின் வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்ட்டிட்யூட்’ டும் இணைந்து ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டின் பிரயாணத்தின் போது வடகிழக்கு பிரேசிலில் 10 லட்சம் வீடுகளில்  குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஒரு திட்டத்தை நாங்கள் பார்வையிட்டோம். அந்த அனுபத்தைத்தான் இந்தப் பதிவில் தந்துள்ளேன். இதனை முழுமையாகப் படியுங்கள். பயன்தருவதாகவும் இருக்கும் சுவாரசியமாகவும் இருக்கும்.

பிரேசில் நாடு (BRAZIL)

பிரேசில் நாட்டின் பூகோளப் பரப்பு 8514215 சதுர கிலோ மீட்டர். இந்தியாவின் பூகோளப்பரப்பு 32 87 263 சதுர கிலோ மீட்டர். கிட்டத்தட்ட இந்தியாவைப்போல 2.5 மடங்கு பெரிய நாடு. இந்தியாவைப் போலவே இது ஒரு விவசாய நாடு. பிரேசில் நாட்டுக்கு உலகின் உணவுக்கூடை என்று பெயர். இங்கு இருக்கும் ஒருவகையான செம்மரத்தின் பெயர்தான் பிரேசில் என்பது இதன் தாவரவியல் பெயர் சிசால்பைனியா எக்கினேட்டா.

கேட்டிங்கா (CATINGA)

பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியை கேட்டிங்கா என்கிறார்கள். போர்ச்சுக்கீசிய மொழியில் இதற்கு அர்த்தம் வெண்மையான காடு இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 250 மி.மீ என்றால் ஆவியாகப்போவது அதைவிட அதிமமாக இருக்கும்.

அதுமாதிரியான பகுதி ஏறத்தாழ ஒரு பாலைவனம் என்று கூட சொல்லலாம் சப்பாத்தி மற்றும் பலவலைவன கள்ளிச் செடிகள் நிறைந்த, முட்புதர்கள் பரவலாக இருக்கும் காடு. ஆண்டு முழுவதும் வெயில் வறுத்து எடுத்தாலும் குளிர் பருவத்தில் எலும்புகள் கூட நடுங்கும்.

பிரேசிலின் வடகிழக்குப் பகுதி (NORTH EAST BRAZIL)

இதில் பேரணாம்புகோ பாஹியா மற்றும் சீரா உட்பட ஒன்பது மா நிலங்கள் இதில் அடங்கும்.

சாவ்பாவ்லோ, சால்வடார்(SAV PAVLO, SALVADOR)

செராடாவ் (SERATAO)

செராடாவ் வடகிழக்கு பிரேசிலின் முக்கியமான பகுதி. இது மிகவும் பாரம்பரிய மற்றும் பழமையான கலாச்சார மற்றும் சரித்திர பின்புலமாகக் கொண்ட பகுதி இது. அலகோவாஸ், பாஹியா, பேரம்புகோ, பரெய்பா, ரியோ கிராண்ட் டோ நோர்டி, சீரா மாரன்ஹோ, பிளாய், மினாங்  ஜெராய்ஸ் ஆகிய பகுதிகள் இந்த செராடாவ் என்ற பகுதியில் அடங்கும்.

சாவ் பிரான்சிஸ்கோ ஆறு நீர் (SAV FRANCISCO RIVER)

2914 கி.மீ பிரேசில் முழுவதுமாக 2914 கி.மீ ஓடும் தென் அமெரிக்காவின் நான்காவது நீளமான ஆறு. இதன் கரையோரம் இருக்கும் இரட்டை நகரங்கள் பெட்ரோலினா மற்றும் சுவாசீரோ. மா, திராட்சை, கொய்யா, வாழை, தென்னை ஆகியவை பெட்ரோலினா பகுதியின் முக்கிய பயிர்கள்.

பிரேசிலியன் அக்ரிகல்ச்சரல் ரிசர்ச் கார்ப்பொரேஷன் எம்பிரபா

 (BRAZILIAN AGRICULTURAL RESEARCH CORPORATION - EMPRAPA)

விவசாய நிலங்களை அரசாங்கமே தயார் செய்து நிலங்களை சுத்தம் செஞ்சி சமப்படுத்தறாங்க. வரப்புகள் போடறாங்க. அப்பொறம் அதுல சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கறாங்க. அப்பொறம் இந்த சாவ் பிரான்சிஸ்கோ ஆற்றுத் தண்ணீரை அதுக்கு விதியோகம் செய்ய ஏற்பாடு பண்றாங்க. பிற்பாடு விவசாயிகளுக்கு கடன்ல பத்திரப்பதிவு பண்ணிக்குடுக்கறாங்க. விவசாயிகள் விவசாயம் செய்து அந்த கடனை கழிக்கலாம். ரொம்பவும் குறைச்சலான வட்டி விகிதம் தான். நீங்க 1500 ஏக்கருக்கும் குறைவா வாங்கினா நீங்க ஒரு சிறு விவசாயி அதுக்கு மேல வாங்கினா அவுங்க பெரிய விவசாயி.

மரம் உம்பு என்னும் பழமரம் (UMBU A LOCAL FRUIT)

பிரேசில் நாட்டின் வித்தியாசமான பழமரம் உம்பு நம் நாட்டில் இலந்தை களாக்காய் காரை மாதிரி. ஒரு காட்டுப்பழம். இந்த மரத்தில் ஒரு விசேஷம் அது தனக்கு வேண்டிய தண்ணீரை வேரில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது.

சமீப காலமாக இந்தப் பழம் மிகவும் பிரபலமாகி உள்ளது. இதற்குக் காரணம் இந்தப் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள். இந்த குழுக்கள் இந்தப் பழங்களில் பழச்சாறு பழக்கூழ் ஜெல்லி ஆகியவற்றைத் தயாரித்து தங்கள் நாடு முழுக்க விற்பனை செய்கிறார்கள். இதற்கு உள்ளூரில் இருக்கும் தொண்டு நிறுவனம் இதற்கு உதவியாக உள்ளது.

அரசும் ஊட்டச்சத்து மிக்க பழம் என அங்கீகாரம் அளித்துள்ளது. இங்கு உள்ள தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவின் ஒரு அங்கமாகி உள்ளது, இந்த பழச்சாறு. இத்தனைக்கும் இதனை யாரும் சாகுபடி செய்யவில்லை. வறண்டுபோன முட்காடுகளில் இயற்கையாக வளர்ந்திருக்கும் மரங்களில் இந்தப் பழங்களை சேகரிப்பதோடு சரி.

உள்ளூர்ப் பழமாக இருந்த உம்புவுக்கு தற்போது தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சிறு சிறு வேராட்டல்களில் கூட மாம்பழம், கொய்யாப்பழம், அன்னாசி ஆப்பிள் ஜூஸ்களுக்கு மத்தியில் வீற்றிருக்கிறது நமது உம்பு ஜுஸ்.

அப்படிப் பார்த்தால் ஏகப்பட்ட பழங்கள் இந்தியாவில் இருக்கிறது. மாம்பழமும், திராட்சை, பேஷன் பழம், ஆகியவை இங்கு பிரதானமாக இருக்கிறது. இங்கு மாம்பழத்தை மாங்காஃபுரூட் என்றுதான் அழைக்கிறார்கள். அது இந்தியாவிலிருந்து இங்கு வந்தது என்று மறக்காமல் சொல்லுகிறார்கள். இந்தத் திட்டத்தை அரசுடன் இணைந்து ரீடெஹ் (REDEH) என்றும் மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு என்னும் தொண்டு நிறுவனம் இதனை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டம் செயல்படும் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் இங்கு கிடைத்த மொத்த மழையே 350 மில்லிமீட்டர்தான். அதாவது ஒரு ஆண்டின் ஆண்டு சராசரி மழையின் அளவு வெறும் 7 மில்லிமீட்டர் மட்டுமே. இங்கு இருந்த காடுகள் இதுவரை 90 சதம் அழிக்கப்பட்டுள்ளது. கேட்டிங்கா பகுதியின் தட்ப வெப்பநிலை இது தான்.

10 லட்சம் வீடுகளில் கூரைநீர் அறுவடை செய்யும் திட்டம் (ROOF WATER HARVESTING IN 10 LAKH HOUSES)

பிரேசில் அரசும் 750 தொண்டு நிறுவனங்கள், அத்துடன் விவசாய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் கூட்டுறவு சங்கங்கள், சர்ச்சுகள் மற்றும் பொதுநலச் சங்கங்கள், சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக 10 லட்சம் வீடுகளில் மழை அறுவடைத் தொட்டிகளை அமைத்திருக்கிறார்கள்.

இதில் 5 விதமான குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்

1.     விதவைகள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் கொண்ட குடும்பங்கள்.

2.     6 வயது வரை குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள்.

3.     பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள்.

4.     65 வயதுடைய முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள்.

5.     உடல் ஊனமுற்றவர்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள்.

16000 லிட்டர் கொள்முதல் கொண்ட தொட்டிகள் (WATER TANKS)

இந்தத் திட்டத்தின் மூலம் 16000 லிட்டர் அளவுள்ள தொட்டிகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வறட்சியான எட்டுமாதங்களுக்கான தண்ணிர்த் தேவைக்கு என திட்டமிட்டிருகிறார்கள். குடிக்கவும், சமைக்கவும், ஒரு நாளைக்கு 66 லிட்டர் என கணக்கிட்டிருக்கிறார்கள்.

தண்ணீரை சுத்தம் செய்யும் மீன்கள் (WATER CLEANING FISH)

இந்தத் தொட்டியில் சேகரிக்கும் தண்ணீரை இயற்கையான முறையில் சுத்தம் செய்கிறார்கள். இதற்கு ஒரு வகையான மீனை தொட்டியில் வீடுகிறார்கள். இந்த மீன்கள் அந்தத் தண்ணீரை சுத்தம் செய்கின்றன இந்த முறை ஏற்கனவே இந்த மக்களிடையே பிரபலமாக உள்ளன.

தொட்டிக் குழிகளை எடுப்பது பங்கேற்புப்பணி (PARTICIPATORY RESPONSIBILITY)

இந்தத் தொட்டிகளைக் கட்டுவதற்கான குழியினை எடுப்பது தொட்டிகளைக் கட்டும் மேஸ்திரிகளுக்கு தங்கும் இடம் கொடுப்பது ஆகியவற்றை பயனாளிகள் செய்ய வேண்டும். இது பயனளிகளின் பங்கேற்பு என்பது குறிப்பிடத்தக்கது இந்த தொட்டிகளைக் கட்டும் வேலை செய்ய அதிகபட்சம் 5 நாட்கள் ஆகும்.

இந்த தொட்டிகளையும் மழை அறுவடை அமைப்பையும் பராமரிக்கும் பயிற்சியினை அந்த குடும்பத்தில் யாராவது ஒருத்தர் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் இதனை பெண்களே விருப்பமுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்தத் தொட்டிகள் பாதி அளவு தரைமட்டத்திற்கு கீழேயும் பாதி அளவு தரைக்கு மேலேயும் இருக்குமாறு அமைத்திருக்கிறார்கள்.

பயன்கள் (USES)

1.     தினசரி தண்ணீர் சுமந்து வரும் பெண்களுக்கான பெரும்பணிச்சுமை குறைந்துள்ளது.

2.     மழை வராத காலங்களில் டிரக்குகளில் தண்ணீர் வாங்கி தொட்டிகளை நிரப்பிக் கொள்ளுகிறார்கள்.

3.     தண்ணீர் வாங்குவதற்கான செலவு மிச்சம்.

4.     கூடுதலான நிச்சயமான தண்ணீர் வசதி இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் கூடியுள்ளது.

5.     ஒரு சிறிய அளவு தண்ணீரைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். சமையலுக்கு புத்தம் புதிய காய்கறிகள் கிடைக்கிறது. கூடுதலான உற்பத்தி வருமானம் தருகிறது.

6.     இதிலிருந்து ஆடுமாடுகள் குடிக்க மற்றும் தீவனங்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆய்வு செய்து திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் (WELL PLANNED PROJECT)

ஒரு குடும்பத்திற்கு தண்ணீர் தேவை எவ்வளவு ஒர் ஆண்டில் எத்தனை மாதங்களுக்குத் தேவை ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை இது பற்றிய ஆய்வுகளைப் பல ஆண்டுகள் செய்தார்கள். எம்பரப்பா என்ற ஆராய்ச்சி நிலையத்தில் செய்தார்கள். அதன் பின்னர்தான் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இந்தத் தொட்டிகளைக் கட்டுவதற்காக 5848 மேஸ்திரிகளுக்கு இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

நாபர்டு வங்கி வேர்ல்ட் ரிசோர்ஸஸ் இன்ஸ்டிடியுட் பிரேசில் (NABARD BANK & WORLD RESOURCE INSTITUTE)

இந்தப் பயிற்சியினை நபார்டு வங்கியும் பிரேசில் நாட்டு வேர்ல்ட் ரிசோர்ஸஸ் இன்ஸ்டிடியூட்டும் இனைந்து ஏற்பாடு செய்திருந்தது. 2014 ம் ஆண்டு ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் 12 நாட்கள் இந்தப் பயிற்சியினை எங்களுக்கு அளித்தார்கள் இந்தியாவில் தெரிந்தெடுக்கப்பட்ட சில தொண்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்றனர். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.

18% நல்ல தண்ணீர் இருக்கும் நாடு (BRAZIL HAVE MORE WATER)

உலகின் மொத்த நல்ல தண்ணீரில் 18 % பிரேசில் நாட்டில் உள்ளது. ஆனாலும் 27 மாநிலங்களில் கொண்ட பிரேசிலில், முக்கிய நகரங்களில், 28 % மாநிலங்களில் மட்டுமே போதுமான தண்ணீர் கிடைக்கிறது. செமி ஏரிட் பிரேசில் என்று சொல்லப்படும் கட்டிங்கா எனும் வறண்ட 9 மாநிலங்களில் சுமார் 18 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள்.

இங்கு தண்ணீர் தட்டுப்படு கடுமையாக உள்ளது. அங்குதான் 2003 ம் ஆண்டு 10 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை கட்டிக்கொடுக்கும் பெரிய திட்டத்தைத் தொடங்கியது. இந்த தொட்டிகளில் இருக்கும் தண்ணீரை கைப்பம்பின் மூலம் அடித்து எடுத்துக் கொள்ளலாம்.

Brazil, North East Brazil, Caatinga, White Desert, Rain Starving Place, Sav-pavlo, Salvador, Pernambuco, Sav Francisco River, Brazilian Agricultural Research Corporation, Umbu Fruit, Wild Fruit Tree, Acute Drinking Water Issue, Roof Water Harvesting, Ten Lakh Houses, Govt. and Ngo Support. World Resources Unit, Nabard.

இனிய நண்பர்களே. பிரேசிலில் மட்டும் அல்ல இந்தியாவில் கூட. வீடுகளில் குடிநீர் பிரச்சனை இருந்தால். கண்டிப்பாக  கூரைநீர் அறுவடை மிகவும் பயன் உடையதாக இருக்கும். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.எனது தொலைபேசி எண்:8526195370.

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...