வேர்கடலை வெண்ணையை
அமெரிக்காவில் மட்டும்தான்
தயாரிக்க முடியுமா ?
தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “மல்லாட்ட கொழுப்பு மாமியரை எழுப்பு” என்றும் அதன் அர்த்தம் நமக்கு வேண்டாம்.
அதில் கொழுப்பு அதிகம் அன்று டாக்டர்களே சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அதில் இருப்பது நல்ல கொழுப்புதான், கெட்ட கொழுப்பு குறைவுதான் என்கிறது ஆராய்ச்சி. அதனால் தினமும் சாப்பிடுவதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிடலாம். அவ்வளவுதான் ஓரே வரியில் சொல்வதானால் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்காது.
உடம்பில் அதிக சக்கரை இருப்பவர்களுக்கு பீநட் பட்டர் சரிப்படுமா ?
சக்கரை அளவை இது பராமரிக்க உதவும் “குப்” பென்று ரத்தசக்கரை ஏறாது. இயற்கையாக பீநட் பட்டர் ‘லோ கிளைசிமிக்’ இண்டக்ஸ் உணவுவகை. அதனால் பீநட் பட்டர் பாதுகாப்பானதுதான் பயப்பட வேண்டாம் என்கிறார்கள்.
லோ கிளைசிமிக் என்றால் மெதுவாக செரிக்கும் உணவு என்று அர்த்தம். அப்படி மெல்ல செரித்தால் அது மெதுவாக சக்கரையை ரத்தத்தில் சேர்க்கும். நிலக்கடலையின் கிளைசிமிக் இண்டக்ஸ் 14 மட்டுமே. இது மிகவும் குறைவு என்கிறார்கள்.
நிலக்கடலையில் இருக்கும் மக்னீசியம் சக்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருக்குமா ?
உடம்பில் அதிக சக்கரை வைத்திருப்பவர்கள் ‘டைப் 2’ டயபெட்டஸாக இருப்பார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் மக்னீசியம் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இது மக்னீசியம் கொடுத்து உதவும். மேலும் நிலக்கடலையில் கணிசமாக இருக்கும் நார்ச்சத்து சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.
பீநட் பட்டரில் இருக்கும் சத்துகள் என்னென்ன ?
பீநட் பட்டரில் அதிகம் இருப்பவை வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் புரதம் ஒரு ஸ்பூன் 34 கிராம் பீநட் பட்டரில் எவ்வளவு சத்துகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
1. கலோரி – 188 கிலோ கலோரி
2.
புரதம் – 7.7 கிராம்.
3.
கார்போஹைட்ரேட் – 6.9 கிராம்
4.
சக்கரை 2.6 கிராம்
5.
நார்ச்சத்து 2.7 கிராம்.
6.
சேச்சரேட்டட் ஃபேட் 2.4 கிராம்.
7.
அன்சேச்சுரேட்டட் ஃபேட் 7.4 கிராம்.
8.
மானோ சேச்சுரேட்டட் பேட் – 4.5 கிராம்.
9.
கால்சியம் – 14 மி.கிராம்.
10. அயன் – 0.6 மி.கிராம்.
11. மக்னீசியம் – 51 மி.கிராம்.
12. பாஸ்போரஸ் – 102 மி.கிராம்.
13. பொட்டாசியம் – 238 மி.கிராம்.
14. சோடியம் – 156 மி.கிராம்.
15. ஜிங்க் – 0.9 மி.கிராம்.
இந்த ஊட்டச் சத்துக்களுடன் வைட்டமின்கள் ‘பி’ ‘இ’ மற்றும் ‘கே’ ஆகியவையும் உள்ளன. இவை பிராண்ட்’களுக்கு ஏற்றவாறு வித்தியாசப்படும்.
பீநட் பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள் என்னென்ன ?
![]() |
2.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் தருகிறது.
3.
இதில் இருப்பது நல்ல கொழுப்பு.
4.
ரத்த சக்கரையை பராமரிக்கிறது.
5.
அதிக புரதம் அளிக்கிறது.
6.
இதயத்திற்கு பாதுகாப்பானது.
7.
நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
8.
புற்றுநோய் மற்றும் பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கிறது.
9.
வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களை அதிக அளவில் கொண்டது.
10. நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது.
நிலக்கடலையின் தந்தை
![]() |
FATHER OF GROUNDNUT |
பீநட் பட்டர் ‘ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்’ கண்டுபிடித்த தில்லை நிலக்கடலையில் 300 க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அத்துடன் ‘ஷேம்பூ ஷேவிங்கிரிம்’ ஒட்டும்பசை ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
இன்று அமெரிக்காவின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக நிலக்கடலை இருப்பதற்குக் காரணம் ‘ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின்’ கண்டுபிடிப்புகள் தான். அதனால் தான் ‘ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்’ நிலக்கடலையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
மார்சில்லஸ் ஜில்மோர் எட்சன்
மார்சில்லஸ் ஜில்மோர் எட்சன் 1884 ம் ஆண்டு பீநட் பட்டர் ஐ கண்டுபிடித்தார்.
கனடாவைச்சேந்தவர் ‘மார்சில்லஸ் ஜில்மோர் எட்சன்’ பீநட் பட்டர் கண்டுபிடிப்புக்காக முதன் முதலாக பேடண்ட் வாங்கினார். எட்சன் கண்டுபிடித்த பீநட் பட்டரை இன்று அமெரிக்காவில் 94 சதவிகித மக்கள் சாப்பிடுகிறார்கள்.
பீநட் பட்டர் தயாரிக்கும் வழிமுறையை 1895 ல் டாக்டர் ‘ஜான் ஹார்வி கெல்லாக்’ வடிவமைத்தார். 1903 ம் ஆண்டு பீநட் பட்டர் தயாரிக்கும் மெஷின் ஒன்ரை கண்டுபிடித்தார். டாக்டர் அம்புரோஸ் ஸ்ட்ராப் மிசவுரியைச் சேர்ந்த இவர் 1803 ம் ஆண்டு இந்த மெஷின்’க்கு பேடண்ட் வாங்கினார்.
பல் இல்லாதவர்களுக்காகவா இது ?
நிலக்கடலை சாப்பிட விரும்பும் பல் இல்லாத வயதானவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் பீநட் பட்டர் என்கிறார்கள்.. காரணம் பீநட் பட்டரை விற்பனை செய்தவர் டாக்டர் ‘ஜான் ஹார்வி கெல்லாக்’ அவர்கள்.. அவர் என்ன சொல்லி இதனை விற்பனை செய்தார் தெரியுமா?
“நீங்கள் பல் இல்லாத வயோதிகரா ? உடல் நலம் சரியில்லாதவரா ? உங்களுக்காக தயாரிக்கப்பட்டதுதான் இந்த பீநட் பட்டர்” என்று
விளம்பரம் செய்தார். ஆனால் இன்று பல் இருப்பவர் இல்லாதவர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சாப்பிடுகிறார்கள் பீநட் பட்டர்.
![]() |
PEANUT BUTTER - FIRST COMPANY |
நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்றாவது நாடு அமெரிக்க,
முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பவை சீனா, மற்றும் இந்தியா. அமெரிக்கா, உற்பத்தி செய்யும் நிலக்கடலையில் பாதியை பீநட் பட்டர் தயாரிக்கவே பயன்படுத்துகிறது.
540 நிலக்கடலை கொட்டைகளில் 12 அவுன்ஸ் பீநட் பட்டர் செய்யலாம். ஒவ்வொரு அமெரிக்கரும் ஒர் ஆண்டில் 3 பவுண்டு பீநட் பட்டர் சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ‘ஜிம்மிகார்ட’ர் சாகுபடி செய்யும் விவசாயியாக இருந்தவர். அமெரிக்காவின் 39 வது அதிபராக இருந்தவர். 1977 முதல் 1981 ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ‘ஜிம்மிகார்டர்’ ஒரு கடலை சாகுபடியாளராக இருந்தவர்.
ஆரம்ப காலத்தில் நிலக்கடலை சாகுபடியில் தடுமாற்றம் அடைந்த ஜிம்மிகார்டர் பின்னால் வெற்றிகரமாக விவசாயியாக மாரினார். அவர் தன்னை நிலக்கடலை தொடர்பான அக்ரி பிசினஸ் மேன் என்றே சொல்லிக் கொண்டார்.
‘தாமஸ் ஜெபர்சன்’ அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்தவர் அமெரிக்காவின் அரசியில் பெருந்தலைவர்களின் ஒருவர் அதைவிட நல்ல விவசாயியும் கூட. அவர் தனது பண்ணையில் 170 வகை பழப்பயிர்கள் 330 வகை காய்கறிகளை பயிரிட்டு அனுபவம் பெற்றவர். அத்தோடு சிறந்த நிலக்கடலை விவசாயியும் கூட.
‘ஆபிரகாம் லிங்கன்’ அமெரிக்காவின் 16 வது அதிபராக இருந்தவர். 1862 ல் அவர் அதிபராக இருந்த போது விவசாயத்துறைக்கு பீப்பிள்ஸ டிபார்ட்டெண்ட் எனப் பெயரிட்டார், காரணம் அந்த சமயம் அமெரிக்காவின் 50 சத மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்தது விவசாயம்.
அதே ஆண்டு சிறு விவசாயிகளுக்கு அரசு குறைந்த விலைக்கு பண்ணை நிலங்களை விற்பனை செய்தது. அந்த சமயம் ஒரு ஏக்கர் நிலம் சிறு விவசாயிகளுக்கு 1.25 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது நிலமில்லாத பலர் சிறுவிவசாயிகளாக மாறினார்கள். ஆபிரகம் லிங்கன் அந்த அரசுத் திட்டத்தின் பெயர் ஹோம்ஸ்டெட் ஆக்ட்.
பீநட் பட்டர் எப்படி இருக்க வேண்டும் ?PEANUT BUTTER
பீநட் பட்டர் என்பதற்கு சட்ட பூர்வமாக வரையறை தந்துள்ளது அமெரிக்க அரசு. அந்த சட்டப்பிரகாரம் பீநட் பட்டர் என்றால் அதில் 90 சதம் நிலக்கடலை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாச்சும் வெறும் கடலையைப் போட்டு விட்டு வேர்கடலை என்று கடலை போடக்கூடாது. பீநட் பட்டர் என்றால் அது பீநட் பட்டராகவே இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் வேர்கடலை மாவட்டம் அமெரிக்காவில் வேர்கடலை நகரங்கள்
தமிழ் நாட்டில் தென்னாற்காடு மாவட்டத்திற்கு வேர்கடலை மாவட்டம் என்ற பெயர் இருந்தது. அது போலவே அமெரிக்காவில் ஆறு நகரங்களுக்கு வேர்கடலையின் பெயர் வைத்திருக்கிறார்கள்.
1.
பெனிசில்வேனியா மாநிலத்தில் அப்பர் பீநட் என்பது ஒரு நகரம் லோயார் பீநட் என்பது ஒரு நகரம்.
2.
விர்ஜீனியா மாநிலத்தில் பீநட் வெய்ட் என்பது ஒரு நகரம்.
3.
கலிபோர்னியா மாநிலத்தில் பீநட்
என்பது ஒரு நகரம்.
4.
பென்னிசி மாநிலத்திலும் பீநட் என்பது ஓரு நகரம்.
இப்போது
சொல்லுங்கள், வேர்க்கடலை வெண்ணையை அமேரிக்காவில் மட்டும்தான் தயாரிக்க முடியுமா ?
பூமி
ஞானசூரியன்
Email: gsbahavan@gmail.com
Peanut,
Butter, Peanut butter, Make, Made, Manufacture, Prepare, Produce, Only,
America, United States, Country, Possible, Elsewhere, Home, Kitchen, Factory,
Food, Spread, Product
No comments:
Post a Comment