மீன்களை பார்த்து வாங்குங்கள்
PLASTICS POLLUTION IN OCEANS
பசிஃபிக் சமுத்திரத்தில் பிளஸ்டிக்குகள்
உலகில் உள்ள சமுத்திரங்களில் எல்லாம் 75 முதல் 199 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த பிளாஸ்டிக்குகளில் 92% சதம் இருப்பது எங்கு தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ! தொடர்ந்து படியுங்கள் !
உலகில் உள்ள சமுத்திரங்களில் அதிகமான
அளவு மாசடைந்த சமுத்திரம் எது ? அது எந்த அளவிற்கு மாசடைந்துள்ளது ? அதனால் ஏற்படும்
விளைவுகள் என்ன என்று தான் சொல்லப் போகிறேன்.
உலகிலேயே அதிகமான அளவு மாசடைந்த சமுத்திரம்
என்பது பசுபிக் மகா சமுத்திரம் தான்.
உலகில் இருப்பவை மொத்தம் 5 சமுத்திரங்கள் அவை பசுபிக் சமுத்திரம் அண்டாண்டிக் சமுத்திரம் இந்து மகா சமுத்திரம் தென் சமுத்திரம் அல்லது அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் சமுத்திரம் இதில் மிகவும் பெரியது பசிபிக் சமுத்திரம் சிறியது அண்டார்டிகா.
பசுபிக் சமுத்திரம் உலகின் பெரிய சமுத்திரம் அண்டார்டிக் சமுத்திரம். இரண்டாவது பெரியது இந்து மகா சமுத்திரம். மூன்றாவது பெரிய தென் சமுத்திரம் அண்டார்டிகவை சுற்றி இருக்கும் சமுத்திரம். ஆர்டிக் சமுத்திரம் இருப்பத்திலேயே மிகவும் சிறிய சமுத்திரம். அது மட்டுமல்ல ஆழம் குறைவான சமுத்திரம் கூட.
கடல் மற்றும் சமுத்திரம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? கடல் சிறியது சமுத்திரம் பெரியது என்பது நமக்குத் தெரிந்த செய்தி. அது உலகைச் சுற்றிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பவை ஐந்து சமுத்திரங்கள் கடல்கள் என்று சொல்லலாம். ஆனால் சமுத்திரங்கள் உலகின் 71% பரப்பை ஆக்கிரமித்துள்ளது.
உலகில் உள்ள சமுத்திரங்களில் எல்லாம்
75 முதல் 199 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த பிளாஸ்டிக்குகளில் 92% சதம் இருப்பது
எங்கு தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் !
காரணம் அவை இருப்பது எல்லாம் மீன்களின்
வயிற்றில் என்கிறார்கள் என்று எழுதியுள்ளர் கவோம்ஹி டொன்னலி என்ற நிபுணர்
இந்த மீன்களை சாப்பிடுவர்களை கேன்சர்
என்னும் புற்றுநோய் மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்கள் பாதிக்கும்.
இப்படிப்பட்ட பிளாஸ்டிக்குகளை கடலில்
சேர கரணமாக இருப்பது ஆசியா கண்டம் தான் ஆசியா என்றால் அதில் இந்தியா உட்பட 48 நாடுகள்
இருக்கின்றன.
சமுத்திரங்கள் மற்றும் கடல்களில் மீன்
பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள்
ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஒன்றுக்கு பக்கத்தில் ஒன்பது சைபர் போட வேண்டும்.
இப்படி சமுத்திரங்களில் மிதக்கும் பிளாஸ்டிக்குகளை
2040 ம் ஆண்டுக்குள் 90% அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
திட்டமிட்டதோடு சும்மா இருக்கவில்லை இதுவரை
11.5 மில்லியன் கிலோ பிளாஸ்டிக்குகளை சமுத்திரங்களிலிருந்து அகற்றி அசத்தி இருக்கிறார்கள்
இப்படி பிளாஸ்டிக்குகளை அகற்றுவதால் என்ன
நடக்கும் தெரியுமா? கார்பண்டை ஆக்ஸைடு என்றும் கரியமில வாயுவின் உற்பத்தி குறையும்.
இதனால் பூமியில் ஏற்படும் புவி வெப்பமாதல் குறையும். இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால்
ஏற்படும் விளைவுகளும் குறையும்
சமுத்திரங்களில் சேகரம் ஆகும் பிளாஸ்டிக்குகளுக்கு
நாம் என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள்
முழுமையாக நாம் பிளாஸ்டிக்குகளை தவிர்க்க
முடியவில்லை என்றால் கூட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தாமல் தவிருங்கள்
கடைக்கு போக துணிப்பைகளைப் பயன்படுத்துங்கள்
கடலில் பிளாஸ்டிக்குகள் எவ்வளவு சேருகின்றன அவை எப்படி மீன்களின் வயிற்றில் சேகரம் ஆகின்றன அதனால் என்ன நோய்கள் வரும் ? காலநிலை மாற்றத்திற்கு அது எப்படி வழி வகுக்கும் ? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ? என்றெல்லாம் பார்த்தோம்.
இந்த பிளாஸ்டிக் மாசுவைக் கட்டுப்படுத்த நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? கமெண்ட் பகுதியில் எனக்கு சொல்லுங்கள்.
இந்த பகிர்வினை உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்புங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.
GNANASURIA BAHAVAN D, BHUMII ONLINE CLIMATE SCHOOL (BOCS), THEKKUPATTU, TIRUPPATHUR DISTRICT, TAMILNADU, INDIA, Email:bhumii.trust@gmail.com, Phone:+91 8526195370
No comments:
Post a Comment