Monday, December 1, 2014

வறட்சியை அடித்து நொறுக்கி விட்டார்கள் - DROUGHT IS WELL MANAGED IN BRAZIL



பிரேசில் நாட்டில்  எனது அனுபவம்   



வறட்சியை 
அடித்து நொறுக்கி 
விட்டார்கள்

DROUGHT IS 
WELL MANAGED
IN NORTH EAST
BRAZIL



சப்பாத்திக்கள்ளியின் உதவியுடன் வறட்சியை அடித்து நொறுக்கிய தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் வடகிழக்கு பிரேசில் பகுதியில் வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர் மார்சிலோ.

"சப்பாத்திக்கள்ளியை எவ்ளோ நாள் வேணும்னாலும் 'அறுவடை செய்து வச்சிக்கலாம்.

அழுகாது.
உலராது.
கெட்டுப் போகாது.
ஊட்டச்சத்து கொஞ்சங்கூட குறையாது.

கரையக்கூடிய மாவுப் பொருள் இதுல 70 சதம் இருக்கு. நீர்ச்சத்து 90 சதம் இருக்கு.

ரொம்ப சீக்கிரமா செரிச்சிடும். ஆடு மாடுங்க செரிக்க சிரமப்படாது.

ஆனா காஸ்ட்லியான கால்நடைத் தீவனம்.

ஒரு எக்டர் உற்பத்தி செலவு 600 அமெரிக்க டாலர் ( இந்திய ரூபாயில் 36000) ஆகும்.

ஜைஜாண்டி, ரிடெண்டா, மியூடா - இந்த மூணும் நிறைய மகசூல் கொடுக்கும் சப்பாத்தி ரகங்கள்.

ஒரு எக்கர்ல் 30 லருந்து 38 டன் அறுவடை எடுக்கறாங்க, விவசாயிங்க.
எங்களுக்கு கிடைக்கற மழை ரொம்ப குறைச்சல். ஒரு வருஷத்துல 600 மிமீ தான் கிடைக்குது.

ஆனாலும் வறட்சியை ஜெயிக்க எங்களுக்கு உதவியா இருக்கறது சப்பத்திக்கள்ளிதான். " என்று உற்சாகமாகக் கூறினார் மார்சிலோ.


(ஆண்டு சராசரி மழை தமிழ்நாட்டில் 916 மிமீ, இந்தியாவில் 1125 மிமீ,)

(நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த பிரேசில் பயணத்தின் அனுபவத் திரட்டு)


.

No comments:

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

  தங்க அரளி ( YELLOW BELLS)  மருத்துவப் பயன்கள்  மற்றும் பயன்பாடுகள் Awesome Flowers of  Yellow Bells உங்களுக்கு தெரியுமா? அழகான தங்கரளி. ...