Wednesday, October 4, 2017

புரசு கிளிமூக்கு பூக்கள் தரும் அழகு மரம் PURASU WITH PARROT BEAK FLOWERS


                                                                            புரசு 
கிளிமூக்கு  பூக்கள் 
தரும் அழகு மரம்

PURASU WITH
PARROT BEAK FLOWERS


(புரசு மரப் பூ இல்லாமல் சாந்தி நிகேதனில் இந்தப் பூஜையும் நடைபெறாது; கவி தாகூருக்கு பிடித்தமான மரம்; கல்கத்தாவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில், இந்த மரத்தின் பெயரில் (பலாஷி) ஒரு ஊரே உள்ளது. இங்குதான் பிளாசி யுத்தம் (23 ஜூன் 1757) நடந்தது. அப்போதுதான் கல்கத்தா வெள்ளைக்காரர் வசமானது)

1. மரத்தின் தமிழ்ப் பெயர் : புரசு
2. தாவரவியல் பெயர் : பூட்டியா மானோஸ்பெர்மா  (BUTEA MONOSPERMA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பிலேம் ஆப் பாரெஸ்ட்  (FLAME OF FOREST)
4. தாவரக்குடும்பம்  :  பாபேசி (FABACEAE) 
5. மரத்தின் வகை  :  அழகு மரம்.

6. தழை : விளை நிலங்களுக்கு தழை உரமாகும்; கால்நடைகளுக்கு தீவனமாகும்  
7. பட்டை : பட்டையில் வடியும் பிசின், கருப்பு சாயம் தயாரிக்க உதவும்; அரக்கு பூச்சிகளுக்கு      ஆதரவு அளிக்கும்.   
8. பூக்கள் : பிப்ரவரி, மார்ச் மாத தேனீக்களுக்கு செம்பூக்கள் தேன் தரும்.
9. வுpதை : எண்ணெய் எடுத்து சோப்பு தயாரிக்கலாம்.
10. வேர் : மாவுச் சத்து நிறைந்த வேர்கள்  பன்றிகளுக்கும்  எலிகளுக்கும்  உணவாகும்.
11. இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.
12. சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்

13. மரத்தின் தாயகம் :  இந்தியா  
14. ஏற்ற மண் :  வறண்ட உவர் மண்
15. நடவுப் பொருள் : விதை,  நாற்று,  வேர்க்குச்சி
16. மரத்தின் உயரம் : 9 -- 12  மீட்டர்.

பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370


No comments:

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

  தங்க அரளி ( YELLOW BELLS)  மருத்துவப் பயன்கள்  மற்றும் பயன்பாடுகள் உங்களுக்கு தெரியுமா? அழகான தங்கரளி. திரும்பிய பக்கங்களில் எல்லாம் பார...