Tuesday, January 14, 2020

இந்தியாவின் கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோ யார் தெரியுமா ?





இன்று ஒரு
குறுஞ்செய்தி

NEWS
TODAY

இந்தியாவின்
கவர்னராக இருந்த
சர் தாமஸ் மன்றோ
யார் தெரியுமா ?

திருப்பத்தூர் மாவட்டத்தின்
வருவாய் அலுவலராக
இருந்தவர்தான் அவர். !

தனி மாவட்ட அந்தஸ்து
திருப்பத்தூருக்கு
புதிதல்ல !

இதுவரை வேலூர் மாவட்டத்தின் ஒர் பகுதியாக இருந்த திருப்பத்தூர் தனி மாவட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆனால் தனி மாவட்ட அந்தஸ்து என்பது திருப்பத்தூருக்கு ஒன்றும் புதியதல்ல.

திருப்பத்தூர், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே தனி மாவட்டம் ஆனது. கிபி 1790 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று வாணியம்பாடி பகுதியை உள்ளடக்கியதாக திருப்புத்தூர் தனிமாவட்டம் ஆனது.

இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அன்று திருப்பத்தூர் சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது அப்போதும் சேலம் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்த்து திருப்பத்தூர்தான்.

வரிவசூல் முறையில், வருவாய் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் தொடங்கியது இங்குதான். ரயத்துவாரி முறை என்பதும் இங்கு தான் அறிமுகப்படுத்தப்பட்டது சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த தாமஸ் மன்றோ இங்குதான் வருவாய்த்துறையில் அலுவலராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சர் தாமஸ் மன்றோ அவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல மதிப்பு காரணமாக சென்னை மாநகரில் உள்ள அண்ணா சாலையில் அவருடைய சிலை அமைக்கப்பட்டது.

அதற்கென்ன 1803 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதியன்று சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஆற்காடு மாவட்டம். அப்போது திருப்பத்தூர் அதன் பகுதியாக இருந்தது.  1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் திருப்பத்தூர், வடார்க்காடு மாவட்டத்தின் ஒருபகுதி ஆனது. அதன் மூலம் வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக  வடார்க்காடு மாவட்டம் பிறந்தது.

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...