Wednesday, May 6, 2020

நித்யகல்யாணி சக்கரை நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் மூலிகை - NITHYAKALYANI PROTECT US FROM DIABETES



பாருங்க உங்கள் மூலிகை இதுவா 
LOOK IS THIS YOUR CHOICE HERB 







நித்யகல்யாணி சக்கரை நோயிலிருந்து
நம்மை பாதுகாக்கும் மூலிகை

NITHYAKALYANI  PROTECT

US FROM DIABETES



பொதுப்பெயர்: பிரைட் ஐஸ் (BRIGHT EYES)
தமிழ் பெயர்கள்: சுடுகாட்டுப்பூ, சுடுகாடுமல்லி, நித்தியகல்யாணி
தாவரவியல் பெயர்: கதராந்தஸ் ரோசியஸ் (KATHARANTHUS ROSEUS)
தாவரக்குடும்பம்: அகாந்தாசியே (APPOCYANACEAE)

888888888888888

பிணம் புதைக்கும் இடத்தில் தலைமாட்டில் இந்த செடிகளை நடுவாங்க, சுடுகாட்டுல நிறைய முளைச்சி கிடக்கும், அதனால வீட்டுல யாரும் நடமாட்டங்க, அதிகமாக சிவப்பு வெள்ளை நிறத்தில் பார்க்கலாம், சுடுகாட்டு பூன்னு நாங்க இதப்பாத்தா பேயப்பாக்கறமாதிரி நடுங்குவோம், நித்யகல்யாணி பேரு இப்பொதான் தெரியும், சிட்டியில பயப்படாம வளக்கறாங்க, அவுங்களுக்கு அதன் பழைய பெயர் தெரியாது.

சக்கரை, ரத்தப்புற்று, மலேரியா, கிட்னி சம்மந்தமான நோய்க்கெல்லாம் இதுல மருந்து செய்யறாங்கன்னு சொல்றாங்க. அதுக்கு வேண்டிய வின்பிலாஸ்டின், வின்கிரிஸ்டின் இப்பிடி நிறைய தாவர ரசாயனங்கள் இருக்காம், ஆனா இது விஷத்தன்மை உடையது, இதன் இலை பூ எதையும் ராவா சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க

1996 வாக்கில், சென்னை மைலாப்பூர் பீச்சில், லைட்டவுஸ் பக்கத்தில் கால்டுவெல் ஜி யூ போப் அய்யர் சிலக்கு கீழ் பிங்க், வெள்ளை, என்று வரிசையாக இந்த செடிகள் இருக்கும், என் நண்பர் ரமணன் தினமும் அதில் இரண்டு மூன்று இலைகள் பறித்து சாப்பிடுவார், சக்கரையை கட்டுபடுத்துது சார் என்பார், எனக்கு அப்போது சக்கரை இல்லை, நானும் அவரும் தினமும் காலை நாலு மணிக்கு பீச்சில் நடக்க போவோம், நிறைய வி ஐ பி க்களை அங்கு பார்ப்பேன், கலைஞர் அய்யா அம்பாசிடர் காரில் லைட் போட்டுகொண்டு நியூஸ்பேப்பர் படிச்சிகிட்டு இருப்பார், நாகேஷ் அரைநிஜார் போட்டபடி கையில் ஒரு ஸ்டிக் வைத்தபடி நடந்து போவார், நடிகர் ராஜெஷ்,  சாருஹாசன் இன்னும் நிறையபேரை வேடிக்கை பார்த்துகொண்டே நடப்பேன், நண்பர் ரமணன் எனக்கு சுடுகாட்டுமல்லிபற்றி சொல்லிக்கொண்டே வருவார்.

நித்யகல்யாணி ஒரு முரட்டு செடி, ஒரு வாரம் தண்ணி காட்டலன்னாகூட சமாளிச்சிக்கும், தாக்குப்பிடிச்சி வளரும், நம்ம தோட்டத்துல ஒண்ணு ரெண்டு செடி வைக்கலாம். நிறைய இடம் தேவைப்படாது, சின்ன செடிதான், ரெண்டுஅடி மூணுஅடி வளரும், இலையை கிள்ளினா பால் வரும், ஆனா அதுல நச்சு இருக்கு.

மடகாஸ்கருக்கு சொந்தமான செடின்னு நெட்ல போட்டிருக்காங்க, ஆனா நம்ம செடி மாதிரி ஆயிருச்சி, ஆனா பளிச்சுன்னு இருக்கறதால அழகுச்செடியா ஆயிருச்சி, இப்போ கொரோனா பயம் உலகம் பூரா இருக்கு, அதனால எல்லாரும் நேட்டிவ், ட்ரெடிஷ்னல், இண்டிஜீனஸ், சித்தா,   ஆயுர்வேதிக், யுனானின்னு அதிகம் பேசறாங்க. 

தி.ஞான சூரிய பகவான் 



No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...