Saturday, September 10, 2022

BIRTH PLACE OF CAUVERY


"காவிரியின் தாய்

அகத்தியர் கை கமண்டலம்"

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

ஒரு சமயம் தென்னிந்தியா வரட்சியால் கடுமையாக வாடிய சமயம் அகத்திய முனிவரின் வேண்டுகோளால் சிவபெருமான் கங்கையின் ஒரு பகுதியை அருளினார். அந்த கங்கையின் ஒரு சிறிய பகுதியை அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் அடைத்து வைத்தார்.

விநாயகப் பெருமான் காக்கை வடிவம் எடுத்து அந்த கங்கை தாங்கிய கமண்டலத்தை உருட்டி விட, அதில் இருந்த கங்கை நீர் ஆறாகப் பெருகி ஓடியது. அதுதான் காவிரி ஆறு. ஆக காவிரி ஆற்றுக்கும் கமண்டலத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 

அது போல கமண்டல நதி என்ற ஆறு மூன்று சிறுசிறு ஆறுகளின் தொகுப்பு இது.

பீமன் ஆறுநாகநதி, மற்றும் கமண்டல ஆறு மூன்றின் ஒரு தொகுதிதான் கமண்டல நாக நதி. ஆனால் இந்த கமண்டல நாகநதிக்கு  ஏன் இந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. 

ஆனால் உண்மையில் காவிரி நதியை கமண்டல நதி என்று அழைக்கலாம்.

முனிவர்கள் நீர் வைக்கும் செம்பு,க்கு கமண்டலம் என்று பெயர். பழங்காலத்து ஓவியங்களைப் பார்க்கும் போது இந்த கமண்டலத்தின் மேல் பகுதியில் ஒரு கைப்பிடி இருக்கும். அதன் உடல் பகுதியில் ஒரு சிறிய குழாய் பொருத்தப்பட்டிருக்கும்.  

அதன் மூலம் தண்ணீரை ஊற்றலாம். மேற்பக்கம் ஒரு மூடியும் இருக்கும். அதைத் திறந்து மூட திருகு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இதுதான் கமண்டலம். 

ஏறத்தாழ எல்லா முனிவர்களும், தபசிகளும்  தங்கள் கையில் இந்த கமண்டலம் வைத்திருப்பார்கள்.

கமண்டலம் என்பதற்கு ஒரே வரியில் பொருள் சொல்வது என்றால் நீர் வைக்கும் சிறு பாத்திரம் என்று சொல்லலாம். 

பழங்காலத்தில் இந்த கமண்டலம் எல்லாம் பெரும்பாலும் மண்ணில் அல்லது மரத்தில் செய்வார்கள். 

தற்காலத்தில் அதையே உலோகத்தில் செய்ய ஆரம்பித்தார்கள். 

அந்த காலத்தில் அதிலும் குறிப்பாக புரசு மரத்தில் செய்த கமண்டலங்களை பயன்படுத்தினார்கள். புரசு மரத்தின் பட்டைகளை உறித்து நீக்கிய மரத் தண்டுகள் அல்லது கட்டைகளில் கமண்டலத்தை செய்தார்கள். 

இதனை பழந்தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.

"செம்பூ முருக்கின் நல்நார் களைந்து தண்டோடு பிடித்த தாழ்  கமண்டலத்து..." என்பது புலவர்  ஏனாதி  நெடுங்கண்ணனார் எழுதிய  குறுந்தொகையின் 156 வது பாடல்.

புரசு மரத்துச் செம்பில் தண்ணீரைச் சேமித்து குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும் என்பது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு.

இன்றைய கேள்வி: பூம்புகார் என்ற திரைப்படத்தில் யார் கமண்டலத்தை கையில் வைத்தபடி ஒரு பாடலைப் பாடுவார், அது யார்

மீண்டும் நாளையப் பதிவில் சந்திப்போம், வணக்கம்.

10 செப் 22


 

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...