Saturday, September 10, 2022

SECRET SEX LIFE OF SNAKES - PART II

 


ஆண்பாம்புகள் இல்லாமல் முட்டையிடுமா 

பெண்பாம்புகள்?

அன்பு உடன் பிறப்புகளுக்கு ஞானசூரியன் வணக்கம் !

01. ஒரு முறை உடலுறவு கொண்டபின் ஆண்பாம்புகளின் விந்தணுக்களை சேமித்து வைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் கூட பெண்பாம்புகள் முட்டையிடும். 

02. ஆண்பாம்புகளில் அவற்றின் வால் நீளத்தைக் கொண்டு அது ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கலாம். ஆண் பாம்புகளில் வால்கள் நீளமாக இருக்கும்.

03.ஆண் பாம்புகளில் இரண்டு ஆண்உறுப்புகள், அதன் மலப்புழைக்குள் மறைந்திருக்கும்.

04.ஒவ்வொரு ஆண் உறுப்புடனும் ஒரு விந்துப்பை இணைந்திருக்கும். 

05. ஒரு ஆண்பாம்பு ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது ஒரு ஆணுறுப்பை மட்டுமே பயன்படுத்தும், மிகக் குறைவான அவகாசத்தில் இன்னொரு பெண்பாம்புடன் கூட அதன் இரண்டாவது ஆணுறுப்பைக் கொண்டு அது உடலுறவு கொள்ளும். 

06.பெண் பாம்புகளில் மலப்புழையே பெண்ணுறுப்பாய் கருவாயாய் செயல்படும். 

07.பொதுவாக பாம்புகள் இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளில் முட்டையிடும் பருவத்தை அடைகின்றன. 

08. உடலுறவுக்குப் பின்னால் இரண்டு முதல் நான்கு வாரங்களில் முட்டைகளை இடுகின்றன. 

09.முட்டையிட்ட பிறகு 45 முதல் 70 நாட்களில் முட்டையிலிருந்து பாம்பு குழந்தைகள் வெளி வருகின்றன.

10. உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு ஜாதிகளில்  ராஜநாகங்கள் மட்டுமே முட்டையிட கூடுகளைக் கட்டுகின்றன. 

11. இலைதழை மற்றும் குச்சிகளைக் கொண்டு தனது  முட்டைகள் பொரிக்கும் வரை அவற்றின் பாதுகாப்பிற்காக  ராஜநாகங்கள் கூடு கட்டுகின்றன. 

12. தரைப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் வளைகள், விழுந்து கிடக்கும் மரங்களின் அடிப்பகுதி, பாறை இடுக்குகள் ஆகிய இடங்களில் மறைவாக ராஜநாகங்கள் கூடு கட்டுகின்றன. 

13.ஆண் பெண் பாம்புகள் உடலுறவு முடிவுற்றதும் முட்டையிடும், ஆண்பாம்புகள் இல்லாமலே கூட பெண் பாம்புகள் முட்டையிடும். இதனை பார்த்தினோஜெனிசிஸ் (Parthenogenesis) என்கிறார்கள்.

இதை எழுத ஆரம்பித்த இரண்டாம் நாள் தோட்டத்தில் பின்னல் நடனம் ஆடிய இரண்டு சாரைகள் என்னை துரத்திக்கொண்டு வந்தனகனவில்தான் 

ஒரு மகிழ்ச்சியான செய்தி ! நிறைய பேரின் வேண்டுதலுக்கு ஏற்ப அடுத்து பால்மாடு வளர்ப்பு பற்றிய தொடர் ஒன்று எழுத உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்,   

மேலும் நிறைய பயன் தரும் சுவாரசியம் மிக்க ஓராயிரம் தகவல்களைத் தெரிந்துகொள்ள எனது  வலைத்தளத்தை www.gnanasuriabahavan.com  பாருங்கள்  

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

09 செப் 22

 

No comments:

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

 #MedicinalBenefitsOfYelloBells #YellowBellsPlantUses #TecomaStansMedicalUses #HerbalMedicineYellowBells #BenefitsOfThangaArali #Traditional...