Thursday, November 24, 2022

RELIABLE DOMESTIC MILCH BUFFALO BADAVARI

                                                                

                      பாதாவரி எருமை

பாதாவரி எருமை இனம் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்துக்குச் சொந்தமானது. ஒரு கறவைக் காலத்தில் 1000 கிலோ வரை பால் கறக்கும்.ழவுஓட்ட வண்டிஇழுக்க என்று இதர வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் பாலில் அதிகபட்சமாக

12 % கொழுப்புச் சத்து உள்ளது. இந்தப் பதிவில் பாதாவரி எருமை பற்றிய 12 செய்திகளைப் பார்க்கலாம்.

1. உத்திரபிரதேசத்தில் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்கள்,  மத்தியப்பிரதேசத்தின் குவாலியார் மாவட்டம் ஆகியவை பாதாவரி எருமை இனத்தின் சொந்த மண்.

2. பாதாவரி எருமை இனங்கள் ஒரு கவைக்காலத்தில் 800 முதல் 1000 லிட்டர் பால் கறக்கும். 

3. இந்த எருமையின் காளைகளை உழவு ஓட்டவும், ண்டிகள் இழுக்கவும் பயன்படுத்தலாம். முக்கியமாக பாதாவரி எருமைகள் அதிகபட்சமாக வெப்பத்தை தாங்கக்கூடியது. 

4. பாதாவரி பாலில் 6 முதல் 12.5 % கொழுப்பு சத்து அடங்கியுள்ளது.

5. இதன் கொம்புகள் கருப்பு நிறமாக லேசாக பின் பக்கம் சுருண்டு கழுத்தோரம் சென்று இறுதியாக மேற்புறம் எழும்பியபடி வளைந்திருக்கும். 

6. சுர்த்தி எருமைகள் போல இவற்றின் கீழ் பகுதி வெள்ளை நிறமான கோடுகள் தென்படும். இவை நடுத்தரமான  உடல் அளவுள்ள எருமைகள். தலை சிறியதாக, கால்கள் குட்டையா, ஆனால் உறுதியா, கும்புகள் கருப்பு நிறமாக இருக்கும்.

7. பாதாவரி உடலில் நிறம் செம்மஞ்சள் நிறமாக அல்லது தாமிர உலோக நிறத்தில் இருக்கும். கண்களின் இமைப்புறங்கள் வெளிறிய தாமிர  நிறத்தில் இருக்கும். 

8.ஆண் பெண் மாடுகளுக்கு இடையே உடல் எடை அதிக வித்தியாசம் இருக்காது. காளைகள் 475 கிலோ என்றால் பெண் மாடுகள் 425 கிலோ  இருக்கும். 

9. பாதாவரி ஒரு ஈற்றில் 272 நாட்கள்தான் பால் தரும். மொத்தமாக 750 810 கிலோ வரை பால் தரும். 

10. உலக அளவில் பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு சிறப்பானது இந்திய அளவில் 55 %, உலக அளவில் 64 % பால் தருவது ருமைகள் தான்.

11.பாதாவரி பாலில்  முதல் 12.5% கொழுப்பு சத்து உள்ளது. இந்த எருமைகளுக்கு தீவனத்திற்கான அதிகம் செலவு செய்ய வேண்டாம். 

12. வைக்கோல், சோளத்தட்டை, மக்காச்சோளத்தட்டை, கரும்பு சோகை என்று போட்டால் போதுமானது. 

நண்பர்களே, பாதாவரி எருமை பற்றி இன்னும் பயனுள்ள செய்திகள் வேறு ஏதாவது இருந்தால் எனக்கு சொல்லுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம், நன்றி வணக்கம். 

பூமி ஞான சூரியன் 

#MILKBUFFALOSURTHICATTLE

#UP&MATHYAPRADESHBUFFALO

#DAIRYANIMAIINDIANBUFFALO

#BHADAWARIBUFFALOPRICE

#BHADAWARIBUFFALOCHARACTERISTICS

#BUFFALOIMAGES

#MILKPERDAYCOUNTRYBREED

#MILCHBUFFALOPHOTOS

#BHADAWARIBUFFALOUSES

#BHADAWARIMILKCATTLE

 

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...