Thursday, May 4, 2023

KALLAKURICHY AND CUDDALORE DISTRICT RIVER MANIMUKTHAR மணிமுக்தாறு கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்ட ஆறு.

மணிமுக்தாறு

 

மணிமுக்தார் ஆறு  கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆறு. மணி மற்றும் முத்தா எனும் இரண்டு ஆறுகளின் சேர்க்கையால் உருவான ஆறுதான் இந்த மணிமுக்தாறு. சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாச்சலம் வட்டங்களில் ஓடி கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில் வெள்ளார் ஆற்றுடன் சங்கமம் ஆகிறது. 

கோமுகி மற்றும் பெரியார் ஆறு (KOMUGI AND PERIYAR TRIBUTORIES)

கோமுகி மற்றும் பெரியார் ஆறு ஆகியவை இதன் துணை ஆறுகள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் என்னும் இடத்தில் மணி ஆறும் முக்தா ஆறும் சேர்வதால் பிறக்கிறது மணிமுக்தாறு. கோமுகி மற்றும் பெரியார் ஆறுகள் துணையாறுகளாக மணிமுத்தாறு ஆற்றுக்கு நீர் வளம் கூட்டுகின்றன. 

வெள்ளாற்றுடன் சேர்கிறது (PARANGIPETTAI ESTUARY)

கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு பகுதியில் மணிமுத்தாறு வெள்ளாற்றுடன் சேர்கிறது. பின்னர் வெள்ளாறு பரங்கிப்பேட்டை பகுதியில் வங்கக் கடலுடன் சங்கமம் ஆவது நமக்கு தெரியும்.

கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், இந்த ஆறு சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் விருத்தாசலம் ஆகிய வட்டங்கள் வழியாக மணிமுத்தாறு பாய்கிறது.


ஆறு என்றால் ஆக்கிரமிப்பு (RIVER MEANS MISUSE)

ஆறு என்று இருந்தால் அதற்கு கரைகள் இருக்கும் என்பது பழமொழிஆறு என்று இருந்தால் அதற்கு ஆக்கிரமிப்பு இருக்கும் என்பது புதுமொழி. அந்த வகையில் மணிமுக்தாறும் அதற்குப் பொருந்தும் என்கிறார்கள் ஆற்றைச்சுற்றி வசிக்கும் மக்கள்.

மணிமுத்தாறு ஆறு ஆக்கிரமிப்புபற்றி புதிய  செய்திகள் உங்களுக்கு ஏதாச்சும் தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்களேன்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com


No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...