Sunday, May 21, 2023

THIRUNELVELI DISTRICT RIVER KARUPPANADHI திருநெல்வேலி மாவட்ட ஆறு கருப்பா நதி

தென்காசி கருப்பாநதி டேம்

 

இது திருநெல்வேலி மாவட்ட ஆறு தாமிரபரணி ஆற்றின் துணை ஆறு மற்றும் சிற்றார் ஆற்றின் துணை ஆறும் கூட. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 870 அடி உயரம் உள்ள கடையநல்லூர் வட்டத்தில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கருப்பாநதி ஆறு உற்பத்தி ஆகிறது.

ஹனுமன் நதியின்  முக்கிய துணை ஆறு (TRIBUTARY OF HANUMAN RIVER)

ஹனுமன் நதி பிறக்கும் இடத்திற்கு அறுகிலேயெ வடக்குத் திசையில் பிறக்கிறது. அதுமட்டுமல்ல இது ஹனுமன் நதியின்  முக்கிய துணை ஆறும் கூட. அதன் பிறகு சரிவான தளங்களில் ஒன்பது கிலோமீட்டர் ஒடுகிறது.

வேம்புநதி துணை ஆறு (VEMBU RIVER A TRIBUTARY)

தொடர்ந்து ஓடி சம தளத்தில் உள்ள விசவன்குளம் கிராமத்தை அடைகிறது. அங்குதான் வேம்புநதி என்னும் துணை ஆறு கருப்பா நதியுடன் சேருகிறது. அங்கிருந்து அது 18 கிலோமீட்டர் கண்ணைமூடிக்கொண்டு ஓடுகிறது. பின்னர் அது ஊர்மேலழகியான் அணைக்கட்டிற்குப் பிறகு ஹனுமன் நதியுடன் சேருகிறது. இந்த அணைக்கட்டு கருப்பாநதியின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது.


கருப்பாநதி ஹனுமன் அணைக்கட்டுகள் (DAMS ON HANUMAN RIVER)

கருப்பாநதி ஹனுமன் நதியுடன் சேர்ந்த பிறகு இதன் மீது ஆறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை தலை அணைக்கட்டு, பாப்பக்கால் அணைக்கட்டு, ஸ்ரீவலங்கால் அணைக்கட்டு, ஓப்பன் ஹெட் கிளாங்காடு வடக்குக்கால் அணைக்கட்டு, மற்றும் ஊர்மேல் அழகியான் அணைக்கட்டு.

கிருஷ்ணாபுரம் கிராமம் (ORIGIN KRISHNAPURAM) 

கருப்பாநதி ஆற்றில் குறுக்காக சொக்கம்பட்டி (CHOKKAMPAATY)என்ற இடத்தில் நீர்த்தேக்கம் (KARUPPANIDHI DAM)ஒன்றினை கட்டியிருக்கின்றார்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த சொக்கம்பட்டி கிராமம் இந்த நீர் தேக்கத்தின் கொள்ளளவு 52 லட்சத்து 40 ஆயிரம் கிகியூபிக்  மீட்டர். 

அடவி நைனார் அணை (KUNDARU ADAVINAYINAR DAM)

தென்காசி மாவட்டத்தில் (THENKASI) கடனாநதி, ராமநதி, கருப்பா நதி குண்டாறு, அடவி நைனார் அணை என ஐந்து அணைகள் இருக்கின்றன இதில் பெரும்பாலான அணைகள் தூர்ந்து கிடக்கின்றன என்று பத்திரிகைகளின் செய்தி வந்த வண்ணம் இருக்கின்றன.



அணைக்கட்டுகள் தூர் எடுக்கும் பணி (ANNUAL MAINTENANCE OF DAMS)

கடையநல்லூர் பகுதியில் மட்டும் சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் குறைவான எண்ணிக்கையில் நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுகளை தூர் எடுக்கும் பணியை ஆண்டுதோறும் திட்டமிட வேண்டும். இல்லை என்றால் ஆறுகளில் கட்டப்பட்டிருக்கும் அணைகள் நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகளால் முழுமையான பயனை நாம் அடைய முடியாது. 

கருப்பா நதி அணை தூர்ந்து கிடக்கு.. அதனால கடைமடை பகுதிக்கு தண்ணி வர்றது குதிரை கொம்பா இருக்கு..”  என்கிறார்கள் விவசாயி கள். 

கருப்பாநதி அணை தான் கடையநல்லூர் மற்றும் சொக்கம்பட்டி ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 

ரிகளுக்கு தண்ணீர் (LAKES RECEVE WATER)

இந்த அணையில் இருந்து பெருங்கால்வாய், பாப்பான்கால்வாய் சீவலன்கால்வாய், இடைக்கால்வாய், கிழாங்காடுகால்வாய், ஊர்மேல் அழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 ரிகளுக்கு தண்ணீர் வினியோகம் ஆகிறது. இதனால் 9514.7 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

பயன்பெறும் கிராமங்கள் (VILLAGES BENEFITTED)

கருப்பாநதி அணை மூலம் வைரவன் குளம் கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், உள்ளிட்ட 14 கிராமங்களும் பயன்பெறுகின்றன.

அடவிநைனார் கோவில் அணை மூலம் மேட்டுக்கால் கரிசங்கால் பண்பொழிக்கால், வல்லாங்குளம்கால், கிழங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரை கால் மற்றும் இரட்டைக் குளம் கால்வாய் மூலம் 7643.15 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம்  பெறுகின்றன.


 

No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...