Monday, May 8, 2023

TIRUNELVELI DISTRICT RIVER NAMBIYARU திருநெல்வேலி மாவட்டத்தின் ஆறு நம்பிஆறு

 

 நம்பி ஆறு

எனக்கு நம்பியாறு என்றதும் மறைந்த மாபெரும் சினிமா நடிகர் நம்பியாரைத் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இது தமிழ்நாட்டின்  திருநெல்வேலி மாவட்டத்தின் ஆறு.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி (WESTERN GHATS ORIGIN)

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பாக நாங்குநேரி வட்டப் பகுதியில் ஓடும் ஆறு. சுமார் 45 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் சிறிய ஆறு.

இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 4900 அடி உயரத்தில் மலைப்பகுதியில் பிறக்கும் ஆறு. இந்த ஆறு பிறக்கும் இடத்தின் பெயர் திருக்குறுங்குடி என்பது. 

பரட்டையாறு தாமரைஆறு (TRIBUTARIES OF NAMBIYARU )

நம்பியாற்றிற்கு இரண்டு முக்கிய துணை ஆறுகள் உண்டு. ஒன்று பரட்டையாறு இன்னொன்று தாமரை ஆறு. இந்த இரண்டு ஆறுகளுமே மகேந்திரகிரி மலைத்தொடரில் தான் பிறக்கின்றன. கொடுமுடியாறு மற்றும் மும்பையாறு ஆகிய இரண்டு ஆறுகளும் சேர்ந்து தான் தாமரை ஆறு பிறக்கின்றது. 

ஒன்பது அணைக்கட்டுகள் (RESERVOIRS AND DAMS)

இரண்டு துணை ஆறுகளும் மகேந்திர கிரி மலை அடிவாரத்தில் நம்பியாற்றுடன் இணைகின்றன. சிறிய ஆறாக இருந்தால்கூட நம்பியாற்றில் கூட ஒன்பது அணைக்கட்டுகள் இருக்கின்றன. 

நம்பியாற்றின் ஆற்று படுகை (RIVER BASIN OF NAMBIARU)

நம்பியாற்றின் ஆற்று படுகை என்பது மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளது. அவை ஒன்று திருநெல்வேலி, இரண்டு தூத்துக்குடி, மூன்று கன்னியாகுமரி. 

கருமணியார் மற்றும் ஹனுமான்நதி (OTHER RIVER BASINS)

இந்த ஆற்றுப்பகுதியின் வடபகுதியில் கருமணியார் ஆற்றப்படுகையும் தென்பகுதியில் ஹனுமான் நதி ஆற்றப்படுகையும் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆற்றுப் டுகைகளுக்கும் இடையே உள்ளது தான் நம்பியாறு ஆற்றப்படுகை. இந்த மூன்று ஆற்றுப்படைகளும் சேர்ந்தது தான் நம்பியார் ஆற்றப்படுகை என்பது. 

தாமிரபரணி மற்றும் கொடையார் (THAMIRABARANI & KODAYAR RIVER BASINS)

நம்பியார் ஆற்றுப்படைகையின் ஒருபுறம் தாமிரபரணி ஆற்றுப்படுகையும் இன்னொரு புறம் கொடையார் ஆற்றுப்படைகையும் அமைந்துள்ளது.

நம்பியார் ஆற்றுப்படுகையின் பரப்பளவு(RIVER BASIN AREA)

இந்த நம்பியார் ஆற்றுப்படுகையின் பரப்பளவு 2018.4 சதுர கிலோமீட்டர். இந்த ஆற்றுப் படுகை ஏற்கனவே சொன்னதைப் போல மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது, அதாவது கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி.

 

 

 

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...