Tuesday, June 13, 2023

EFFORTS TO CLEAN GANGES கங்கை சுத்தமாகிறது

கங்கை சுத்தமாகிறது..

 

இதோ   இந்தியாவும்  கோதாவில் இறங்கிவிட்டது. கங்கை நதிக்கரையிலிருந்து  நீர் மறு சுழற்சி மையங்களை அமைக்கப்போகிறது.   ;இந்திய அரசு. மறு சுழற்சி  செய்யப்பட்ட நீர் பொது நிறுவனங்கள்  மற்றும்  தொழிற்கூடங்களிலிருந்து  வழங்கப்பட    உள்ளது.  13 ரயில்நிலையங்கள், மதுரா ரிபைனரி,  13 பவர் புராஜெக்ட்ஸ்ஆகியவை இதில்  அடங்;கும்.

EFFORTS TO CLEAN GANGES

02. கங்கை சுத்தமாகிறது

8888888888888888888888888888888888888888888888888888888

இந்தியாவும்  நீர் ஆதாரங்கள் குறித்து   ஆக்க பூர்வமாக  யோசிக்கத்  தொடங்கி   உள்ளது. மகிழ்ச்சி.  கங்கை நீரை சுத்திகரிக்கப் போகிறார்கள்.  மகிழ்ச்சி  அதனை மறு சுழற்சி செய்யப் போகிறார்கள்.  மகிழ்ச்சி.  சுத்தம் செய்த கங்கைநீரை  தொழிற்சாலைகளுக்கு வழங்க தீர்மானித்திருக்க்pறார்கள். மகிழ்ச்சி. 

இந்திய நதிகளில் புனிதமானநதி  கங்கை.  கங்கையில் குளித்து வந்தால்  எல்லா பாவங்களும் தொலையும்  என்பது ஐதீகம்.  கங்கை தீர்த்தம்  தலையில்பட்டால்கூட  அனைத்து தோஷமும் நீங்கும்.  கங்கை பவித்ரமானது.  கங்கை புராண இதிகாசங்களோடு  தொடர்புடையது.  இந்திய கலாச்சாரத்துடன்  ஒன்றிப்போனது கங்கை. கங்கை நதிப்புறத்து கோதுமைப்  பண்டம்’   என பாரதி  பாடிய கங்கை.

ஒருநாள் வலைத்தளத்தில்  ஆறுகள் பற்றிய செய்திகளுக்காக  மேய்ந்துக் கொண்டிருக்கும்போது  ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது.  உலகில்  மாசு அடைந்த நதிகள் பற்றி பார்த்தேன்.  அதைப் பார்த்ததும்;   மனசு வலித்தது.  மாசு அடைந்த நதிகளில் கங்கை முதல் நிலை வகித்தது. 

அடுத்து உலகில் மிகவும் சுத்தமான நதி எது  துழாவினேன்.  முதல் ஆறு எது  என்று பார்த்தேன்.  லண்டன் நகரின் தேம்ஸ்’;  என்றிருந்தது. சமீபத்தில்  யூகே சென்ற போது  பலமுறை தேம்ஸ்ஐ   சுற்றிவர  வாய்ப்பு கிட்டியது.  நகரத்தின் நடுவே ஓடும்  ஆறுபோல  இல்லைதான். புதிதாய் ஆற்றில் வடிந்த நீர் போலசெம்மண் நிறத்தில்  ஓடிக்கொண்டிருந்தது தேம்ஸ். வலைத்தள  செய்தி உண்மை தான்.

இதோ   இந்தியாவும்  கோதாவில் இறங்கிவிட்டது. கங்கை நதிக்கரையிலிருந்து  நீர் மறு சுழற்சி மையங்களை அமைக்கப்போகிறது.   ;இந்திய அரசு. மறு சுழற்சி  செய்யப்பட்ட நீர் பொது நிறுவனங்கள்  மற்றும்  தொழிற்கூடங்களிலிருந்து  வழங்கப்பட    உள்ளது.  13 ரயில்நிலையங்கள், மதுரா ரிபைனரி,  13 பவர் புராஜெக்ட்ஸ்ஆகியவை இதில்  அடங்;கும்.

இந்த செய்தியை  ரோட் டிரான்ஸ்போர்ட், ஹைவேய்ஸ் அண்ட்  ஷிப்பிங்  துறைக்கான  அமைச்சர் அரசு சார்பில் 13 .3. 2016 . அன்று அறிவித்துள்ளார். 

இதுகூட  நமதுதண்ணீர்  பிரச்சனையை   தீர்ப்பதற்கானது  அல்ல.  கங்கையை  சுத்தப்படுத்தும்  திட்டம்.  கங்கை நதி நீரின் மாசுவை நீக்கும் திட்டம்.   இது சுற்றுச்சூழலை  மேம்படுத்துவதற்கான திட்டம்..    இப்படித்தான் அமைச்சர் நிதின்  கட்காரி  அறிவித்துள்ளார்.

கங்கை மட்டுமின்றி இந்த சிகிச்சையை நாம் நகர்ப்பகுதியில் ஓடும் எல்லா நதிகளுக்கும் தர வேண்டிய நிலையில் இருக்கிறோம் !  

மனிதனுக்கு நாகரீகம் சொல்லித்தந்த   நதிகளுக்கும் ஆறுகளுக்கும்  நாம் அளிக்கும் கொடை சாக்கடையும், குப்பைகளும், மலக்கழிவுகளும்தான். நான் சொல்வது சரியா ?

PLEASE POST A COMMENT, GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

                    9999999999999999999999999999999999999



No comments:

வேர்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள் - 10 POWERFUL HEALTH BENEFITS OF PEANUTS (GROUNDNUT)

#GroundnutHealthBenefits #PeanutsForHeartHealth #IsGroundnutGoodForHeart #GroundnutNutritionFacts #GroundnutAndWeightLoss #GroundnutAndDiabe...