Tuesday, June 13, 2023

PEOPLE’S PARTICIPATION IN RAIN WATER HARVESTING குடிமராமத்து முறையினை மீண்டும் தொடங்கலாமா ?

குடிமராமத்து முறையில்
ஜோஹாத் அமைத்தல்

 

8888

பெரிய அணைகள்

ப்போது நாம் எல்லாம் பெரிய அணைகள் கட்டுவது பற்றியும் நதிகளை ணைப்பது பற்றியும் அதிகமாக பேசி வருகிறோம்.

ந்த பெரிய அணைகள் கட்டுவதும் நதிநீர் ,ணைப்பு செய்வதும் பிரச்சனைகளைத்தான் அதிகப்படுத்தும்.

இவை உடனடியாக பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பதுதான் என் கருத்து என்கிறார் ராஜேந்திர சிங்.

நாங்கள் வெட்டிய குளங்கள்தான் பெய்யும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்று சொல்லுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

நஞ்சை புஞ்சை குளங்கள்

ஜோஹத்கள் என்று சொல்லும் அந்த குங்களுக்கு சிமெண்ட் ரைகள் கட்டுகிறார்கள். அப்படி சிமெண்ட் தரைகள் கட்டிய ஜோகாத்களை டங்கி என்றும் டாங்கா என்றும் சொல்லுகிறார்கள்.

அவை எல்லாம் அளவில் சிறியதாக ருக்கின்றன. பெரும்பாலும் சிமெண்ட் கரையுடைய குளங்களை மானாவாரி பிரதேசங்களில் அமைக்கிறார்கள்

அதையே நஞ்சை நிலத்தில் வேறுவிதமாக  அந்த குளங்களை அமைக்கிறார்கள்.

யற்கையாகவே சரிவாக தாழ்வாக அமைந்த நஞ்சை நிலப் பகுதியில் ஒருவகையான நுரம்பு அல்லது கற்களைக்கொண்டு மூன்று பக்கமும் உயர்ந்த கரைகளை அமைத்து நான்காவது பக்கம் நீர் வழிந்தோட கோடி போன்ற அமைப்பை கட்டுகிறார்கள். இதுவும் ஒரு விதமான தடுப்பணைகள்தான்.

இந்யற்கையாக அமைந்த நிலப்பகுதியிலேயே ஜோகாத்களாக  அல்லது குளங்களாக ஏரிகளாக பயன்படுத்துகிறார்கள்.

ந்த முறையை ஹரியானா> உத்தரப் பிரதேசம்  மற்றும் ராஜஸ்தானின் தார் பாலைவனம் பகுதியிலும் கடைபிடிக்கிறார்கள்.

பெண்களின் நெடும்பயணம்

1985 - 86 ஆம் ஆண்டு வரலாறு காணாத வறட்சியினால் பாதிக்கப்பட்டது. ந்த ஆர்வார் மாவட்டம். குடிக்க கூட தண்ணீர் ,இல்லாமல் தவித்தார்கள். ஒரே ஒரு குடம் தண்ணீர் எடுக்க பெண்கள் நெடும்பயணம் செல்ல வேண்டியிருந்தது.

அப்போதுதான் ராஜேந்திர சிங் அந்த கிராமத்தில் காலடி எடுத்து வைத்தார். அந்த சமயம் காடுகளிலிருந்து மரங்களை வெட்டுவதன் மூலம்  மர வியாபாரம் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறந்தது. ,ன்னொரு பக்கம் சுரங்கங்களைக் தோண்டி பூமி பரப்பை சல்லடை ஆக்கிக் கொண்டு ருந்தார்கள் சிலர்.

ஆர்வார் மாவட்டம்

ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் ஒன்று தான் ஆர்வார் மாவட்டம். இது ராஜஸ்தானில் மூன்றாவது மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்று. இதன் பரப்பளவு 2380 சதுர கிலோமீட்டர்.

ர்வார் பெரிய விவசாய மாவட்டம். ராஜஸ்தானின் 25 சத விவசாய நிலப்பரப்பு இங்குதான் உள்ளது. இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால்  83 சதவிகித நிலப்பரப்பு இறவை நிலங்களாகவும் 13 சதம் மட்டும் மானாவாரி நிலங்களாக உள்ளன. 

ராஜேந்திரசிங்கின் தருண் பாரத் சங்கம் 

ராஜேந்திரசிங் 1059 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர். இன்றைய தேதியில் அவருடைய வயது 60.

அவருடைய தொண்டு நிறுவனத்தின் பெயர் தருண் பாரத் சங்கம். அது  ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். ஹோரிபேகம்புரா  என்ற கிராமத்தில் உள்ளது இதன் தலைமையகம். 

தார்பாலைவனம் 

இது சரிஸ்கா டைகர் ரிசர்வ் என்னும் புலிகள் சரணாலயத்தின் அருகில் உள்ளது. தார் பாலைவனமும் இதன் அருகில்தான்  அமைந்துள்ளது.

உத்தரபிரதேச கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 60 ஏக்கர் விவசாயம் பார்த்த பெரிய விவசாயிக்கு தலை மகனாக பிறந்தவர் சிங்.

ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் சாத்திர யுவ சங்கம் வாகினி என்ற அமைப்பில் ஒரு பகுதியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார் ராஜேந்திர சிங்.

கல்வித்துறையில் பணி 

பிஎம்எஸ் எனும் ஆயுர்வேத மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற வர் 1980ஆம் ஆண்டு நேஷனல் சர்வீஸ் வாலண்டியர் என்னும் அரசு பணியில் கல்வித்துறையில் ஜெய்ப்பூரில் பணியில் சேர்ந்தார். 

பிறகு ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் தான் அவர் யங் இந்தியா அசோசியேஷன் என்னும் தருண் பாரத் என்ற அமைப்பில் சேர்ந்தார்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு

இந்த அமைப்பு ஜெய்ப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டது. 1984ல் அந்த அமைப்பு முழுமையாக ராஜேந்திர சிங் அவர்களின் பொறுப்பில் வந்தது. அதன் பிறகு அவர் செய்த பணிகள் பலவற்றையும் நாம் சென்ற கட்டுரைகளில் பார்த்தோம். 

நாளையே நதிகளை இணைத்துவிட்டால் கூட அதன் மூலம் நீடித்த நிலைத்த பயன்பெற வேண்டுமானால் நீர் சேமிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டியது அவசியமான ஒன்று.

அவர் செய்த இந்த பணிகளை நாம் நம் கிராமத்தில் எப்படி செய்யலாம்  என்று யோசியுங்கள் ! மனமிருந்தால் மார்க்கமுண்டு.

PLEASE POST A COMMENT, REGARDS GNANASURIA BAHAVAN D (AUTHOR);

            888888888888888888888888888888888888888888888888

 

 

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...