Friday, April 11, 2025

How Can a Place Be Without Rainfall? Exploring Earth's Driest Regions உலகத்துல மழை பேயாத ஊரு இருக்கா ?

 #placeswithoutrainfall #driestplacesonEarth #desertswithnorain #SaharaDesert #AtacamaDesert #causesofaridclimates #lifeindryregions #climatechangeanddroughtrain #shadow effect #extreme aridity 

உலகத்துல மழை

பேயாத ஊரு இருக்கா ?

HAND STATUE IN ATACAMA DESERTS

நம்ம ஊர்ல ஒரு வருஷம் கொஞ்சம் கம்மியா மழை பேஞ்சா கூடபாழாபோன பேயாம எப்படி காஞ்சி கிடக்குது பாரு” என்று சொல்லுவாங்க.

மழை அதிகமாக பேஞ்சாலும்எப்படி பாவ புண்ணியம் பார்க்காம ௳ழை பேயுது பாரு” ன்னு சொல்லுவாங்க.

ஜெய்சால்மர்

“இந்தியாவிலேயே எங்க ஊர்ல தான் கம்மியா மழை பெய்யுது” ன்னு சொல்றாங்க ராஜஸ்தான் மாநிலத்துகாரங்க.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் அப்படின்னு ஒரு இடம் இருக்கு. அங்க தான் ரொம்ப கம்மியான மழை என்று சொல்றாங்க. ஒரு வருஷம் 365 நாட்கள்ள இங்க பேயற மழை வெறும் 181 மில்லி மீட்டர் தான்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி

அது மாதிரி தமிழ்நாட்டுல எங்க கம்மியான மழை பேயுதுன்னு கேட்டா "எங்க ஊர்ல தான் கம்மியான மழை பேயுது"ன்னு சொல்றாங்க தூத்துக்குடி மாவட்ட காரங்க. அங்கே கிடைக்கிற மழை ஒரு வருஷத்துல 655 மில்லி மீட்டர். கணக்கு போட்டு பாருங்க ராஜஸ்தான் ஜெய்சால்மரில் பெய்யும் மழையை விட தூத்துக்குடியில் கிடைக்கிற மழை கிட்டத்தட்ட 3.5 மடங்கு அதிகம்.

சிரபுஞ்சி மான்சிராம்

உலகத்துல ஒரு இடத்துல மட்டும் தான் வருஷம் 365 நாளும் மழை பேயுது. அது எந்த ஊருன்னு தெரியுதா ? அதுதான் மான்சிராம். இந்தியாவில் இருக்கு. மேகாலயாவுல இருக்கு. சிரபுஞ்சிக்கு பக்கத்து ஊரு. சிரபுஞ்சியில் இருந்து 16 கிலோமீட்டர்.

அங்க தான் வருஷம் 365 நாளும் மழை பேயுது. பதினோராயிரத்து 782 மில்லிமீட்டர் மழை.

தொடர்ச்சியா ஒரு வாரம் பேஞ்சாலே, நம்மால தாக்கு பிடிக்க முடியல. வருஷம் 365 நாளும் பேஞ்சா யோசிச்சு பாருங்க.

ஐநூறு வருசம் மழை இல்லை

மழை கொஞ்ச நாள் தள்ளி போயிட்டாமழை பேஞ்சு கெடுக்கும் இல்லன்னா காஞ்சி கெடுக்கும்” னு நாம சொல்லுவோம்.

CACTUS OF ATACAMA

உலகத்துல 500 வருஷமா மழை பெய்யாத இடங்கள் இருக்கு. தெரியுங்களா ? அதைத்தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம் முக்கியமா. 

தென் அமெரிக்கா – சைல் - அட்டகாமா

அது தென் அமெரிக்காவுல இருக்கு. சைல் அப்படிங்கற நாட்டுல இருக்கு. அட்டகாமா பாலைவனத்தில் இருக்கு. அங்க இருக்குற சில இடங்களில் மழை பேஞ்சு 500 வருஷம் ஆகுதாம். “மழை இல்லன்ன என்ன பனி பெய்யுதுல்ல. அதை அறுவடை செய்வோம்” அப்படிங்கறாங்க.

ARICA A PORT CITY OF ATACAMA

மூணு மில்லி மீட்டர் மழை

சைல் நாட்ல அட்டகாமான்னு ஒரு பாலைவனம்  இருக்கு. இங்கே பெய்யக் கூடிய ஆண்டு சராசரி மழை அதிகபட்சமா 3 மில்லி மீட்டர். சில இடங்கள்ல 15 மில்லிமீட்டர் மழை கூட பெய்யுதாம். இது ரொம்ப அதிகமான மழையாம்.

சில இடங்கள்ள சுத்தமா 500 வருஷமா மழையே இல்லைன்னு சொல்றாங்க.அந்த இடங்கள்ள எவ்வளவு ஜனங்கள் இருக்காங்க ? எப்படி வாழறாங்க ? அப்படின்னு பார்க்கிறது தான்  இந்த கட்டுரையினுடைய நோக்கம்.

சுத்தமா மழை இல்லை

பொதுவா பாலைவனம்னா வறட்சியான பகுதி வறண்ட பகுதி ! ஆனா அட்டகாமா  ரொம்பவும் ஜாஸ்தியான அளவு வறண்ட பாலைவனம்!

பாலைவனம் என்றால் மழை குறைச்சலா பெய்யும். ஆனா அட்டகாமா பாலைவனத்துல நிறைய இடங்களில் சுத்தமா மழையே பெய்யறதில்லை.

மூடுபனி அறுவடை

FOGS AROUND THE HILLOCKS 

இங்க மழை பெய்யாது. ஆனா மூடுபனி ஊடுகட்டி பேயுது. உலகத்துல அதிகமான மூடுபனி இங்கதான் பெய்யுது. இங்க மூடுபனிய அறுவடை பண்ணி  குடிக்கறாங்க, சமைக்கறாங்க, குளிக்கறாங்க, பயிர் பண்றாங்க. அப்புறம்  காடு வளக்கிறாங்களாம் ! ஆச்சரியமா இருக்குது ! பாலைவனத்தை “சோலை வனமாக்குவோம் ! மேலைவனமாகவும் மாற்றுவோம்” என்கிறார்கள்.

FOG CATCHING

இங்க எங்க பார்த்தாலும் நிலங்கள் எல்லாம்  நிறைய கல்லா இருக்குமாம், உப்பா இருக்குமாம்.

மாதிரி செவ்வாய் கிரகம்

அதுமட்டுமில்ல இங்க 12 எரிமலைகள் இருக்கு. அட்டகாமா பாலைவனத்தின் மண்ணு மணல் பாறை, கல்லு, எல்லாம் செவ்வாய் கிரகம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க.

எலான் மஸ்க்குக்கு பிடிக்கும்

அதனால செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு பதிலா அட்டகாமாவுல செஞ்சா போதும் அப்படின்னு சொல்லிட்டு இங்க நிறைய ஆராய்ச்சிகள் செய்றாங்களாம். எலான் மஸ்க் அங்க போனாரான்னு தெரியல !

கடலோர பாலைவனம்

உலகத்துல அதிகமான சோடியம் நைட்ரேட் உப்பு இங்கதான் இருக்கு. பசுபிக் கடலோட ஓரத்துல மட்டும் 1600 கிலோமீட்டர் நீளமான இந்த பாலைவனம் இருக்கு.

 சைல் நாட்டுக்கு சொந்தம்

1800 ஆம் ஆண்டு வாக்குல "அட்டகாமா எனக்கு தான் சொந்தம்"னு பொலிவியா நாடு சொன்னது. “இல்ல இல்ல அது எங்களுக்கு தான் சொந்தம்”னு சைல்நாடு சொன்னது. இதுக்காக ஒரு பெரிய சண்டையே நடந்துச்சு. சைல்நாடு ஜெயிச்சதால இப்ப சைல் நாட்டோட பொறுப்புல இருக்குது இந்த அட்டகாமா.

இங்க பகல் நேரத்தில் வெயிலோட வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் இருக்குமாம். ராத்திரியில அது 41 டிகிரி பாரன்ஹீட்டா குறைஞ்சிடுமாம். அதாவது 5 டிகிரி சென்டி கிரேட் க்கு  குறைஞ்சிடும். அட்டகாமா நட்சத்திரங்கள் மாதிரி எந்த நாட்டு நட்சத்திரமும் பிரகாசமா இருக்காது அப்படின்னு சொல்றாங்க.

உலகின் பெரிய டெலஸ்கோப்

உலகத்திலேயே ரொம்பவும் பெரிய டெலஸ்கோப் இங்க தான் இருக்கு. அதனால முக்கியமான ஆராய்ச்சி எல்லாம் இங்கதான் செய்ய முடியுமாம்.

WORLD'S LARGEST TELESCOPE

ஒரு வருஷத்துல 300 நாட்களுக்கும் அதிகமாக வானம் மேகம் இல்லாமல் சுத்தமா இங்க தான் இருக்குமாம்.

பத்து லட்சம் ஜனம்

இந்த அட்டகாமா பாலைவனத்தில் பத்து லட்சம் பேர் வசிக்கிறாங்க.

கடலோர கிராமங்கள் சுரங்க பகுதிகள் ஓயாசிஸ்பகுதிகள் இங்கெல்லாம் தான் ஜனங்க வசிக்கிறாங்க.

OASIS OF ATACAMA

ஆலிவ் விவசாயம் ஆல்பகாஸ் கால்நடை

ஆலிவ் கொட்டைகள், தக்காளி, மற்றும் வெள்ளரி இதுதான் அவங்களோட முக்கியமான விவசாயம்.

நாம ஆடு மாடு வளக்கற மாதிரி அவங்க வளக்குற கால்நடைக்கு பேருஅல்பகாஸ்” என்பது.


 நம்ம ஆடுகள மந்தை மந்தையா வளக்குற மாதிரி அவங்களும் இந்த அல்பகாச மந்தமந்தயா வளக்குறாங்க.

மழை தடுக்கும் மலைகள்

ஆண்டஸ் மலைகள் அப்புறம் வந்து சைலியன் கோர்ஸ் ரேஞ்ச் இந்த மலைகள் ரெண்டும் தான்   இந்த அட்டகாமாவுக்கு மழை வராமல் தடுக்குதாம்.

பசுபிக் கடல் மற்றும் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து வரக்கூடிய மேகங்கள் இங்கே வராமல் இந்த மலைகள் தான் தடுக்குதாம். அதனாலதான் அட்டகா மாவில் மழை பேயறதில்ல.

இங்கு இருக்கும் இதர உயிரினங்கள் கூட வித்தியாசமா இருக்குங்க.

அட்டகாமா ஸ்பெஷல்

உதாரணமாக செந்தேள், சாம்பல் நிற நரிகள், பாலைவன குளவிகள், பாலைவன பட்டாம்பூச்சிகள், இதெல்லாம்தான் அட்டகாமா ஸ்பெஷல் அப்படின்னு சொல்றாங்க.

சைல் நாட்டுக்கு போறவங்க முக்கியமா பார்க்கக்கூடிய இடங்களில் முக்கியமானது அட்டாகாமா பாலைவனம் தான்.

பழைய கற்காலம் - அட்டகாமினோஸ்

பழைய கற்காலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னாடி முடிஞ்சு போச்சு. அதை ஆங்கிலத்தில ஸ்டோன் ஏஜ் அப்படின்னு சொல்லுவாங்க. பேலியோலித்திக் ஏஜ் அப்படின்னும் சொல்லுவாங்க.

அந்த காலத்துலஅட்டகாமினோஸ்” அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு இன மக்கள் இங்க வசிச்சாங்களாம். அந்த இனம் சுத்தமா இப்ப அழிஞ்சு போயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் இடமேது ?

சுரங்கவேலை தொழிலாளிகள்

பொலிவியா, பெரு மற்றும் சைல் நாடுகளிலருந்து வந்தவங்க தான் அதிகமா இங்கு இருக்கும் சுரங்கள்ள வேலை பாக்குறாங்க. பாலைவனத்துல இருக்கற இந்த சுரங்கள்ள எப்படி வேலை பாக்கறாங்க.

இங்கு இருந்த நைட்ரேட் சுரங்கங்கள் எல்லாத்தையும் மூடிட்டாங்க. ஆனாலும் சுரங்க தொழில் நடந்துகிட்டு தான் இருக்கு.

லித்தியம் தங்கம் வெள்ளி

அதுக்கு காரணம் இங்க நிலத்துக்கு அடியில ஏகப்பட்ட உலோகங்கள் இருக்கு. தங்கம், வெள்ளி, இரும்பு, தாமிரம், இது இல்லாம போரான், லித்தியம், இதெல்லாம் கூட இங்க நிறைய இருக்கு. ஆனா மழை இல்லாம தண்ணீர் இல்லாம எப்படி எல்லாத்தையும் ஆக்கபூர்வமா செய்யறாங்க ? ஆச்சரியமா இருக்கு.

ஒருத்தர் ரொம்ப நாளா கால்ல போடுறதுக்கு நல்ல செருப்பு இல்லன்னு கஷ்டப்பட்டு இருந்தாராம். ஆனா அவர் ஒருநாள் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது, கால் இல்லாத ஒருத்தர பார்த்தாராம். அதுக்கு பிறகு இந்த நல்ல செருப்பு கவலை அடியோட போயிடுச்சாம்.

அந்த மாதிரிதான் மழை இல்லாத பூமியை பார்த்து நம்ம ஆறுதல் அடையணும். அட்டகாமா மாதிரி மூடுபனி அறுவடை பண்ற நிலைமை நமக்கு வந்தா எப்படி இருக்கும் என்று யோசனை பண்ணி பாருங்க.

பூமி ஞான சூரியன்


No comments:

10 லட்சம் வீடுகளில் குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் - HOW ONE MILLION HOMES SOLVED WATER ISSUES

  நான் பிரேசிலில் நேரடியாகப் பார்த்தது – 10 லட்சம் வீடுகளில்   குடிநீர் வெற்றிமுறை / நபார்டு & WRI பயண அனுபவம் /  WHAT I LEARNED IN BRAZ...