மரமாக வளர்ந்து மருந்தாக நிற்கும் மூங்கில்PHYLLOSTACHYS NIGRA
கருப்புமூங்கில்
GREEN GOLD:UNLOCKING THE MEDICINAL SECRETS OF BAMBOO
“மூங்கில் இப்படியெல்லாம் கூட மூங்கில் நமது நோய்களை குணப்படுத்த முடியுமா ? “என்று நினைக்கும் அளவிற்கு மூங்கில் நமக்கு ஒரு மூலிகையாக விளங்குகிறது என்று இந்தப் பதிவை படித்துப் பாருங்கள்.
சிலிகா(SILICA CONTENT)
நமது தோல், நகம், மற்றும் எலும்புகள்
ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பது சிலிகா(SILICA) என்னும் ரசாயனம்.
இந்த சிலிகா மூங்கில்களில் இயற்கையாக இருப்பில் உள்ளன. பூமியில் அதிகப்படியாய் இருக்கும்
தாது உப்புகளில் ஒன்று.
ஆன்டி ஆக்சி டெண்டுகள் (ANT OXIDANT
PROPERTIES)
பொதுவாக மூங்கிலின் இலைகளில் ஆன்டிஆக்சிடெண்ட்டுகள்
அதிகம் இருப்பதால் ஆக்சிடேஷனால் (OXIDATION) ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.
எதிர் ஆக்சிகரணம் அல்லது ஆக்சிகரணத் தடுப்பு
என்று சொல்லலாம்
![]() |
BAMBUSA TULDA அகர்பத்தி மூங்கில் |
மூங்கில் உணவு செரிமானத்திற்கு உதவியாக
உள்ளது, இதற்குக் காரணம் இதில் இருக்கும் நார்ச்சத்து.
அழற்சி குறைப்பான் (ANTI
INFLAMATION)
அழற்சி என்றால் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கம், வலி. வெப்பம் அதிகரிப்பு, மற்றும் அதன் செயலிழப்பு ஆகியவை ஏற்படும். அதனைத் தடுக்கும் குணத்தைத்தான் நாம் அழற்சி குறைப்பான் என்று சொல்லுகிறோம்.
ஜீரணத்திற்கு உதவும் தன்மை (அ)செரிமான
ஆரோக்கியம் (அ)செரிமான நலம் (DIGESTIVE HEALTH)
மூங்கிலின் இளந்தண்டுகளில் செரிமானத்திற்கு
உதவும் பண்புகள் உள்ளன. இவற்றுக்குக் காரணம் மூங்கிலில் இருக்கும் நார்சத்து இருப்பு.
நுண்ணுயிர் எதிர்ப்பு(ANTI MICROBIAL
ACTIVITY)
மூங்கிலில் நுண்கிருமிகளுக்கு எதிராக
அல்லது அவற்றை கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதால் அதனை நுண்கிருமிகள் எதிர்ப்பு
என்று சொல்லலாம்
பாக்டீரியா, வைரஸ், பூசணங்கள், ஒட்டுண்ணிகள்
ஆகியவற்றை நாம் நுண்ணுயிர்கள் என்று சொல்லுகிறோம்.
RESPIRATORY RELIEF ஆரோக்கியமான சுவாசத்திற்கு
உதவும்
பழங்கால வைத்திய முறைகளில் மூங்கிலில்
இருந்து எடுக்கும் சாற்றினை சுவாசத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் தீர்க்க பயன்படுத்தி
இருக்கிறார்கள்.
தோல் ஆரோக்கியம்(SKIN CARE)
தோல் சமந்தமான நோய்களை குணப்படுத்தும்
மருந்துகளில் மூங்கில் சாற்றினை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. உடல் தோலினை மென்மைப்படுத்து
வதற்கும் அதற்கு இயற்கையான மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.
பொதுவாக எல்லா மூங்கில்களிலும் இந்த மருத்துவ
குணங்கள் அடங்கி உள்ளது.
ஆனால் தொப்பை மூங்கில் என்ற ரகத்தை அதிகமாக
அழகு மற்றும் அலங்கார மூங்கிலாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ மூங்கில் ரகங்கள்
மூங்கில்கள் பெரும்பாலும் மருத்துவத்
தன்மை கொண்ட மூங்கில்கள் என்றாலும் பாம்பூசா வல்காரிஸ்(BAMBUSA VIS) மற்றும் பில்லோடாக்கிஸ்
எடுலஸ் (PHYLLOTACHYS EDULIS)ஆகிய ரகங்களை மருத்துவ மூங்கில் இனங்கள் என்று சொல்லலாம்.
மூங்கில் இனங்களில் குறிப்பாக கீழ்கண்ட
ஆறு மூங்கில் இனங்களை மருத்துவ மூங்கில்கள் என குறிப்பிடலாம்.
பேம்பூசா அருண்டினேசி(BAMBUSA
ARUNDINACEA) இதனை முள் மூங்கில் என்னும் சொல்லலாம்.
இந்த ரகத்தினை ஆயுர்வேதம் சித்த மருத்துவம் ஆகிய வற்றில் மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்சனைகள் மூட்டுவலி மற்றும் செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மருந்து தயாரிப்பில் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
BAMBUSA VENTRICOSA தொப்பை மூங்கில்
எலும்புகள் உறுதிப்படுத்தி
சிலிகா அதிகம் இருப்பதால் எலும்புகளை
உறுதிப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
இளம் மூங்கில் குருத்துகளை சிறுநீர் போக்கு(DIURETIC)
மற்றும் நீரழிவு நோய்கள் குணப்படுத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
ஆண் மூங்கில் / கல்மூங்கில்
டெண்ட்ரோ கலாமஸ் ஸ்ட்ரிக்டஸ் (DENDRO
CALAMUS SIRICTUS), இதனை கல்மூங்கில் மற்றும் ஆண் மூங்கில் என்று சொல்லுகிறார்கள்,
இதில் கீழ்கண்ட இரண்டு மருத்துவ குணங்கள் உள்ளன.
இன்றைக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளில்
முக்கியமானது வைரஸ் நோய்கள் அதற்குதான் மருந்துகள் கிடையாது. அப்பிடியே இருந்தாலும்
அதற்கு தடுப்பு மருந்துகள் வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். ஆனால் குணப்படுத்த முடியாது.
கொரோனா போன்றவை இவைதான். உலகம் முழுக்க பயப்படும் வைராஸ் நோய்கள் இந்தப்பட்டியலில்தான்
அடங்கும். இதைத்தான் நாம் ஆன்ட்டி மைக்ரோப்ஸ் என்று சொல்லுகிறோம் .
இந்த மூங்கிலில் முக்கியமாக இரண்டு பண்புகளை சொல்லுகிறார்கள் அவை ஆன்டி இன்ஃபலமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல்(ANTI INFLAMMATORY & ANTI MICROBIAL)
காயங்கள் குணப்படுத்தி
இந்த இன மூங்கில் இலைகளில் எடுக்கும்
சாற்றினை மற்றும் இலைச் சாற்றினையும் காயங்கள் குணப்படுத்தியாகவும்(WOUND HEALER) காய்ச்சல்
(FIVER REDUCTION)குறைப்பியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
கருப்பு மூங்கில்
(PHYLLO STACHYS NIGRA, BLACK BAMBOO
இந்த மரங்களைப் பார்த்தால் ஆச்சிரியப்படுவீர்கள்
சட்டெனப் பார்த்தால் நம்ம ஊர் பன்றிக்கரும்பு மாதிரி இருக்கிறது கருப்பு நிறத்தில்
இந்த மூங்கில் மரங்கள் அழகோ அழகு
சீனாக்காரர்கள் இந்த கருப்பு மூங்கிலை
வைத்துக்கொண்டு நஞ்சு முறிப்பானாக (DETOXIFICATION) அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால்
பாம்புகடிக்கு பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை
மூங்கில் இலைச்சாறு(BAMBOO HEAF
EXTRACT)
பாம்பு கடிவாயில் மூங்கில் இலைச்சாற்றினை
சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்து, பாம்பு விஷத்தினை வெளிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
பாம்புகடி பட்டவர்களுக்கு இந்த கருப்பு
மூங்கில் சாற்றினை குடிக்க கொடுத்து குணப்படுத்துகிறார்கள். இது குடலில் இருக்கும்
நச்சினை குணப்படுத்துவதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் பாம்பு கடிக்கான மருந்துகள் தயாரிப்பில்
மூங்கிலை பயன்படுத்துவதாகத் தெரியவில்லை
ஆனால் கருப்பு மூங்கில் பாம்புகடிக்கு
சிறந்த குணம் தருவதாகச் சொல்லுகிறார்கள் சீனர்கள்.
அகர்பத்தி மூங்கில்
(BAMBUSA TULDA)
டுல்டா மூங்கில் ரகத்தினை இண்டியன் டிம்பர்
இந்திய கட்டிட மரம் என்று சொல்லலாம். இந்த மூங்கில் ரகத்திற்கு மிக பெரிய எதிர்காலம்
காத்திருக்கிறது என்று சொல்லுவேன் காரணம் இந்த மூங்கில் ரகத்தைத்தான் நம் ஊரில் அகர்பத்தி
தாயரிப்பாளர்கள் வியட்நாம் மற்றும் சீனாவிலிருந்து கோடி கோடியாய் பணம் தந்து வாங்குகிறார்கள்.
ஆனால் இது நம்ம ஊரிலேயே நன்றாய் வளர்கிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் சக்கைப்போடும்
இந்த மூங்கில் ரகத்தினை நாம் இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லை. இதனைத் தெரிந்து கொண்ட
போது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. எனது தோட்டத்தில் கூட இப்போது 10 மரங்கள் இருக்கும்.
இதய ஆரோக்கியம், மற்றும் நோய் தடுப்பு
டெண்ட்ரோகலாமஸ் ஆஸ்பெர், இதில் ஆன்டி
ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் ஃபிளேவனாய்ட்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது
முக்கியமாக இதனை இதய ஆரோக்கியம், மற்றும்
நோய் தடுப்பு சக்தியை வழங்குவதற்காகவும் இதனைப் பயன்படுத்தலாம்
பில்லோடேக்கிஸ் எடுலிஸ்
(PHYLLOTACHYS EDULIS) இதனை மோசோ பேம்பூ(MOSO BAMBOO) என்று சொல்லுகிறார்கள்
உடலின் வெப்பத் தன்மை, மற்றும் இருமல்
ஆகியவற்றை குணப்படுத்த சீனாவின் வைத்திய முறைகளில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
மூங்கிலின் இளம் தண்டுகள்
செரிமானம் குறைவாக இருப்பவர்களுக்கு சீன
நாட்டின் இந்த மூங்கிலின் இளம் தண்டுகளை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள். இதற்குக்
காரணம் இதில் அதிகம் இருக்கும் நார்ச்சத்துதான்.
நீங்கள் யாராவது மூங்கிலை மருந்தாகப்
பயன்படுத்திய அனுபவம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள், இந்தப் பதிவு உங்களுக்கு பயனுடையதாக
இருந்தால் அன்புகூர்ந்து உங்கள் நண்பர்களுக்கு இதனை பகிர்ந்து அனுப்புங்கள், நன்றி
வணக்கம்.
#BambooMedicinalUses #HealthBenefitsOfBamboo
#HealingPrpertiesofBamboo #BambooInTraditionalMedicine #BambooHomeRemedies
#BambooForWellness #NaturalHealingPlants
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment