Tuesday, April 29, 2025

தங்க அரளி ( YELLOW BELLS) மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்பாடுகள் MEDICINAL BENEFITS OF YELLOW BELLS (Tecoma Stans) A COMPREHENSIVE GUDE

 #MedicinalBenefitsOfYelloBells #YellowBellsPlantUses #TecomaStansMedicalUses #HerbalMedicineYellowBells #BenefitsOfThangaArali #TraditionalMedicinalPlantsIndia

தங்க அரளி ( YELLOW BELLS) 

மருத்துவப் பயன்கள் 

மற்றும் பயன்பாடுகள்

Awesome Flowers of  Yellow Bells

உங்களுக்கு தெரியுமா? அழகான தங்கரளி. திரும்பிய பக்கங்களில் எல்லாம் பார்க்கலாம். அழகு மரமாக. ஆனால் எவ்வளவு மருத்துவ குணங்களை தன்னிடம் அது வைத்துள்ளது என்று தெரியுமா? அது பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது. ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சி காட்டுவது, கொளுத்தும் வெப்பத்தையும் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களை தாக்குப்பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தை தொட்டுவிட துடிக்காமல் 15 - 20 அடி உயரத்திற்கு வளர்ந்து அடக்கி வாசிப்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது, இதெல்லாம் தான் தங்க அரளி மரத்தின் குணங்கள்.

Serrated Margin Leaves of Yellow Bells

அத்தோடு இந்த மரத்தின் மருத்துவ குணங்களையும், என்னென்ன நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளன, என்பதையும் இங்கு  தந்துள்ளேன்.

பல மொழிப் பெயர்கள்:

தமிழ் : தங்க அரளி – THANGA ARALI

கன்னடம் : கோரநேக்லார் – KORANACHELLAR

தெலுங்கு : பச்சகோட்லா – PACHAKOTLA

இந்தி : பிலியா – PILIA

தாவரவியல் பெயர் : டெக்கோமா ஸ்டேன்ஸ் – TECOMA STANS

பொதுப் பெயர் : எல்லோ பெல்ஸ் – YELLOW BELLA

தாவரவியல் குடும்பம் : பிங்னோனியேசி – BIGNONIACEAE

சொந்த ஊர் : விர்ஜீன் தீவு அமெரிக்கா – VIRGIN ISLAND AMERICA

கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளது.

1.     1. உடல் உரமூட்டி (Tonic)

2.     2. சிறுநீர் பெருக்கி (Diuretic)

Fruits of Yellow Bells
3.     3. மேகப்புண் (Syphilis)

4.     4. சக்கரை நோய் (Diabetes)

5.     5. குடற் புழு கொல்லி (Anti helminthic)

6.     6. வயிற்றுவலி (Stomach ache)

இப்பொக்கூட உலகம் பூரா 80 சதவிகிதம் இயற்கையான மருந்துகளைத்தான் பயன்படுத்தறாங்க. 

ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, ஹோமியோபதி எல்லாமே இயற்கை வைத்திய முறைகள்தான்.

Even Seeds Have Medicinal Properties
ஏற்கனவே  நான் செய்த ஆய்வுகள்படி மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் என்று எதையும் ஒதுக்க முடியாது, ஆனால் நாம்  இன்னும் இவற்றை  சரியாகப் பயன்படுத்த வில்லை என்றுதான் இந்தத் துறையின் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

தங்க அரளி செடிகளை, நோய்களின் சிகிச்சைக்கு நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா ? “ஆம்”  என்றால் உங்கள் கருத்துகளை “கமெண்ட்ஸ்” பகுதியில் எழுதுங்கள் / பதிவிடுங்கள்.

FOR FURTHER READING

1. NCBI - National Centre For Biotechnology Information. "Medicinal Properties of Tecoma Stans."

https://www.ncbi.nlm.nih.gov

2. Plants For a Feature (PFAF).Tacoma stans - Medicinal Plant Database Entry" https://pfaf.org/user/plant.aspx?Latin Name=Tecoma + stans

3. Journal of Ethnopharmacology, Elsevier (ScienceDirect). "Pharmacological and Traditional Uses of Tecoma stans

https://www.sciencedirect.com/journal-of-ethnopharmacology

பூமி ஞானசூரியன்


 

 

 

 

 

 


No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...