#AncientTamilnadu #ExemplaryInIrrigationEngineering #KallanaiAncientDamInCauveryRiver #Dr.AbdulKalam #FormerPresidentOfIndia #InteratedWaterMission #TamilSangaLiterature #Thokappiyam #Silappathikaram #Thirukkural #MazhaikkuriSasthiram #Pattinappalai #KarchiraiTamilNameForCheckdam #NumerousNamesInTamilForWaterBodies #Dr.Kodumadi Shanmugam #பண்டைப்பசனப்பொறியியல்
பண்டைப் பாசனப்
![]() |
DR.KODUMUDI SHANMUGAM (Ex)Sup.Engineer PWD |
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னாலேயே தமிழ்நாட்டில் பாசனப் பொறியியல் எப்படி இருந்தது ? கல்லணையை எப்படி கட்டினார்கள்
? அது பார்வையிட்ட வெள்ளைக்காரர்கள் அதுபற்றி என்ன சொன்னார்கள்?
பழந்தமிழர்களுக்கு பாசனப்பொறியியலில், எந்த அளவுக்கு அனுபவம் இருந்தது? இதுபற்றியெல்லாம்
இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
பண்டைப்பாசனப் பொறியியல்
பல ஆண்டுகளுக்கு முன்னால்
எனக்கு ஒரு அற்புதமான ஒரு புத்தகம் கிடைது அந்தப் புத்தகத்தின் தலைப்பு பண்டைப்பாசனப்
பொறியியல் என்பது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் டாக்டர் கொடுமுடி ச.சண்முகன்
அவர்கள் அவர் பொதுப்பணித்துறையில் கன்காணிப்புப் பொறியாளராக வேலை பார்த்தவர். அவரை
ஒரு பொறியாளர் என்று சொல்லுவதைவிட அவர் சிறந்த தமிழறிஞர் என்று சொல்லலாம்.
அப்துல் கலாம்
![]() |
DR.ABDUL KALAM & INTEGRATED WATER MISSION |
நாம் இன்று வாட்டர்ஷெட் என்கிறோம்.
வாட்டர் மேனேஜ்மெண்ட் என்கிறோம். நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாம் அவர்கள். இண்டக்ரேட்டட் வாட்டர் மிஷன் என்று சொல்லுவார்.
அப்படிப்பட்ட செய்திகளை நமது
முன்னோர்கள் விரல்நுனியில் வைத்திருந்தார் கள். அந்த செய்திகளை எல்லாம் இந்த நூலில்
தந்துள்ளார்.
சங்க இலக்கியங்கள்
இந்த பாசனப் பொறியியல் என்னும்
சம்மந்தமான செய்திகள் சங்க இலக்கியங்களில் எங்கெல்லாம் இருக்கின்றன என்று தேடிப் பிடித்து
நமக்கு விளக்கியுள்ளார்.
சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம்,
திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல், சீவகசிந்தாமணி, பெருந்தொகை, மழைக்குறி
சாஸ்திரம் என்ற நூல்களில் இருந்தெல்லாம் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்
இது போன்ற செய்திகளை எல்லாம்
ஆய்வு செய்ய ஒருத்தருக்கு தமிழ் அறிவும் வேண்டும், அவருக்கு அறிவியல் தொடர்பான நிபுணத்துவமும் வேண்டும். அப்போதுதான் அவரால் இப்படி
ஒரு புத்தகத்தை எழுத முடியும்.
கற்சிறை
கிராமப் புறங்களில் உள்ள ஒடைகளில்
ஒடும் நீரை நிறுத்தி அதன் வேகத்தைக் குறைத்து நிலத்தடியில் நீரை சேமிக்கிறோம். சேமித்த
நீரைப் பயன்படுத்துகிறோம். இதற்கு நாம் பரவலாக தடுப்பணை என்னும் கட்டுமானத்தை பயன்படுத்துகிறோம்.
இதனை நாம் ஆங்கிலத்தில் செக்டேம் என்று சொல்லுகிறோம்.
அதாவது ஒடும் நீரை தடுத்து
நிறுத்தும் தடுப்பணை. ஆனால் அதனை நம் முன்னோர்கள் கற்சிறை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மிகையாக வழிந்தோடும் ஓடுநீரை ஆங்கிலத்தில் ரன் ஆஃப் வாட்டர் என்கிறார்கள். அப்படி தப்பி
ஒடும் தண்ணீரைப் பிடித்து சிறைவைக்கும் கட்டுமானம் என்று, அதற்கு கற்சிறை என்று சொன்னார்கள்.
நாம் கூட இனி தடுப்பணையை கற்சிறை என சொல்லலாம்.
தரிசு நிலம்
தரிசாகக் கிடக்கும் நிலங்களுக்கு
மிகையாக நீர் இருக்கும் இடங்களில் இருந்து கொண்டு சென்று அவற்றை பயிர் வயல்களாக மாற்றும்
தொழில்நுட்பம், நம்மிடம் 3000 ஆண்டுகளாக இருந்தது. அந்த தொழில்நுட்பங்களை நமது முன்னோர்கள்,
எகிப்து மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள் என்ற அரிய செய்தியை
பதிவு செய்துள்ளார் கொடுமுடி ச.சண்முகம் அவர்கள்.
அதாவது மிகையாக இருக்கும்
தண்ணீரை நீர் தட்டுப்பாடு உள்ள நிலங்களுக்கு கொண்டு செல்லும் தொழில் நுட்பம். அதைத்தான்
அப்துல்கலாம் அவர்கள் தனது “இண்டக்ரேட்டட் வாட்டர் மிஷன்” திட்டத்தில் அற்புதமாகத்
திட்டமிட்டுத் தந்துள்ளார்.
மழை அறுவடை
வெற்று நிலங்களை வயல்களாக
மற்றும் தொழில்நுட்பங்களை நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால் தான்
வட மாவட்டங்களில் ராஜராஜ சோழன் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினான், என்று
நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
நதிநீர் இணைப்பு
நிலத்தை வயலாக்கும் அடிப்படையான
தொழில்நுட்பத்தில் இருப்பவை இரண்டு முக்கியமான அம்சங்கள். ஒன்று இருக்கும் இடத்திலிருந்து
நீரை இல்லாத இடத்திற்கு கொண்டு செல்வது. இரண்டாவது நீர் வளம் இல்லாத பூமியில் நீர்
வளத்தை உருவாக்குவது. முன்னதைச் செய்ய அதிக பொருட் செலவாகும்.
மோடிஜி பாணி லாவோஜி
![]() |
MODIJI PAANI LAO JI |
தற்போது ஆட்சியில் இருக்கும்
மத்திய அரசு ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் நதிநீர் இணைப்பு முடிந்துவிடும் என்று நாம்
எதிர்பார்த்தோம். இன்னும்கூட எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நான் கூட மோடிஜி பாணி
லாவோஜி என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டேன். அதில் நான் நதி நீர் இணைப்பை விரைந்து செய்யுங்கள்
என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.
நாம் எல்லோரும் நம்புவோம் நதிநீர் இணைப்பு வரும் மோடிஜி கண்டிப்பாய் நீர்வளத்தில் ஏழை மாநிலங்களாக உள்ள தென் மாநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவருவார் என நம்புவோம்.
நீர் சுழற்சி
கடலில் இருக்கும் நீர் வெப்பத்தால்
ஆவியாகிறது, இந்த ஆவி மேகமாகத் திரள்கிறது, திரண்ட மேகம் குளிர்ந்து மழையாக பெய்கிறது,
பெய்யும் மழைநீர் பலவிதமாய் பயனாகி மிகையாக நீர் மீண்டும் கடலை அடைகிறது. இதைத்தான்
நீர் வட்டம் அல்லது நீர் சுழற்சி என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை வாட்டர் சைக்கிள்
என்கிறார்கள்.
தமிழ்ப்புலவர்கள்
இந்த நீர்சுழற்சிற்கு உலகத்தின்
மிகப்பெரிய கிரேக்க நாட்டின் அறிஞர்கள் ஆசிரியர் தேலஸ் அவர்களுக்கு பிளாட்டோவும் அவருடைய
மாணவர் அரிஸ்டாடில் கூட இதற்கு ஏதேதோ விளக்கங்கள் எல்லாம் சொன்னார்கள்
இது பற்றி நமது தமிழ்ப்புலவர்களிடம்
கேட்டார்கள் சட்டென ஆளுக்கொரு பாட்டை எழுதி கையில் கொடுத்து விட்டார்கள். பட்டினப்பாலை
ஆசிரியர்கள் நல்லுந்துவனார் ஒரு பாட்டு, மைபோட்டுக்கோவனார் ஒரு பாட்டு. மாதிரிக்கு
ஒரு பாட்டு சொல்லுகிறேன் கேளுங்கள்.
வான்முகந்த நீர் மழைப் பொழியவும்
மழைப்பொழிந்த நீர் கடல்பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்னு நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியாப் பல பாண்டம் --
பட்டினப்பாலை
உருத்திரங்கண்ணனார்
தொல்காப்பியத்தில் தடுப்பணை
பாசனத் தொழில் நுட்பத்தை உதாரணமாக
காட்டும் அளவிற்கு அந்தத் தொழில்நுட்பம் பிரபலமாக இருந்துள்ளது. ஒடைகளின் குறுக்காக
கற்களால் சிறு அணைகள் கட்டி ஒடிவரும் நீரை சிறைபிடித்தது போல தேக்கி வைத்து, கால்வாய்
மூலமாக வயல்களுக்கு விநியோகம் செய்யும் முறை, தொல்காப்பியர் காலத்திலேயே பழக்கத்தில்
இருந்து வந்துள்ளது.
வீரன் என்பவன் போர்க்களத்தில்
எதிர்த்து வரும் போர்வீரர்களை ஒருவரை நின்று ஒடிவரும் நீரை தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கும்
கற்சிறை போல தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு தொல்காப்பியப்பாடல்.
அந்த இரண்டுவரிப் பாடலை சொல்லுகிறேன்
கேளுங்கள்
“விடுசிறைப்
புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கி பெருமையானும்..”
இந்தப்பாட்டு செக்டேம் என்னும்
தடுப்பணை பற்றி தொல்காப்பியம் சொல்லும் செய்தி.
கோடி போச்சா ?
இன்னும் இரண்டு செய்திகளை
இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒரு குளத்தில் முக்கியமானது அதன் கரை. அதைவிட
முக்கியமானது கோடி என்பது. மழைக்காலத்தில் கிராமங்களில் விவசாயிகள் பேசும் போது “என்னாச்சு
உங்க குளம் கோடி போச்சா?” என்பார்கள். ஆனால் இன்று அந்த பேரெல்லாம் ஓடிபோச்சு !
அதற்கு “நிரம்பிவிட்டதா” என்று
அர்த்தம். குளம் நிரம்பியதும் கூடுதலான நீர் கோடியின் மூலமாக வெளியேறும். கோடி இல்லை
என்றால் “கரை எங்கு பலவீனமாக இருக்கிறதோ அங்கு உடைப்பெடுக்கும்”. ஆக கரையின் பலவீனமான இடத்தை கண்டுபிடித்து அதனைச் சரி செய்வார்கள்.
கோடி என்பது கரை அல்ல
இந்த கோடியை ஒப்பிட்டு திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை எழுதியுள்ளார். “சுற்றம் தழால்” என்பது திருக்குறளின் 53 வது அதிகாரம். அதில் சுற்றத்தார் என்பவர் ஒரு குளத்திற்கு கோடி போன்றவர் என்கிறது குறள்.
திருவள்ளுவர் கோடி என்று குறிப்பது குளத்தின் கரையின் ஒரு அங்கமாக இருக்கும் கோடியைப் பற்றித்தானே தவிர கரையைப்பற்றி அல்ல, என்று எழுதிகிறார் டாக்டர் கொடுமுடி சண்முகன் அவர்கள்.
கொடிப்போதல் என்ற வார்த்தை இன்னும் கூட புழக்கத்தில்
இருப்பதால் ஆசிரியர் சொல்வது சரியே என்று நான் நினைக்கிறேன் அதனால் கோடி என்பது வேறு
கரை என்பது வேறு.
இப்போது அது என்ன திருக்குறள்
என்று பார்க்கலாம்
“அளவளாவு இல்லாதான் வாழ்க்கை
குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைத் தற்று”நீர் நிலைகள் பற்றிய பழந்தமிழ்
சொற்கள்
பண்டைப் பாசனப் பொறியியல் பற்றி இந்த நூலில் பலநூறு செய்திகள் இருக்கின்றன. அத்தனையும் இந்தப் பதிவில் சொல்ல முடியாது. நீர் நிலைகள் பற்றிய ஏராளமான சொற்களை நாம் தமிழில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அந்த சொற்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனாவும் சில சொற்கள் ஊர்களின் பெயர்களில் ஒட்டிக் கொண்டன.
உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.
ஏந்தல் என்றால் சிறிய ஏரி,
தண்ணீரை ஏந்தப் பிடித்துக் கொண்டிருப்பாதால் அது ஏந்தல்.
தாங்கல் என்பது தண்ணீரைத் தாங்கி
நிற்கும் இடம் என்று அர்த்தம்.
இயற்கையான பள்ளங்களில் நீர்
தேங்கி இருந்தால் அவை மடு.
ஏரி குளங்கள் கிடங்குகள் போன்றவை
பாசன நீரைத் தரும் நீர் ஆதாரங்கள்.
நீர் ஒடும் இடங்கள் ஓடைகள்,
இலஞ்சி என்பவை பூந்தோட்டங்களில் இருக்கும் நீர் நிலைகள். இவை தவிர கேணி கிணறு கண்மாய் போன்ற
சொற்கள் எல்லாம் இன்னும் கூட நமக்குத் தெரிந்த வார்த்தைகளாக உள்ளன
நிகண்டுகள்
இப்போது நாம் நிகண்டு என்று
சொல்கிறோம். அது போல தமிழில் நிகண்டுகள் அதில் இதுபோன்ற சொற்கள் எல்லாம் இருக்கும் அதில்
நீர்நிலைகள் பற்றிய பாடலை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அந்த ஒரே ஒரு பாட்டில்
18 சொற்கள் அடங்கியுள்ளன இதோ அந்தப் பாடல்
“இலஞ்சி கயம் கேணி கோட்டகம்
ஏரி
மலங்கன் மடு ஒடை வாவி சலந்தரம்
வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை
குட்டம் கிடங்கு குளம்”
இந்த நூலின் ஆசிரியர் பொறியியல்
தொடர்பான பல ஆய்வுகளைச் செய்துள்ளார். அது பற்றி எழுதியும் இருக்கிறார். அவற்றில் பாசன
நீர் தொடர்பான செய்திகள் மட்டும் இந்த நூலில் தந்திருக்கிறார். காரணம் இதை நூலாக வெளியிட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் துவாக்குடி நீர் மேலாண்மைப் பயிற்சி மையம்.
இந்த நூலில் உள்ளவற்றில்
சிலவற்றை மட்டும்தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். இந்தச் செய்திகள் நாம் பாசனப்
பொறியியலில் நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான அறிவுடையவர்களாக இருந்திருக்கிறார்கள்
என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
நமது விவசாயிகளுக்கு தற்போது
நமக்கு மலிவாகக் கிடைக்கும் நவீன பாசன முறைகள் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டு அதனை சிறப்பாக பயன்படுத்த வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இந்தப் பதிவை எனது நண்பரும் முன்னாள் தலைமைப்பொறியாளர் அமரர் அகமுடை நம்பி அவர்களுக்கும், இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் கொடுமுடி சண்முகம் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இதுபோன்ற செய்திகளை மக்களுக்குத்
தெரிவிப்பது தங்கள் கடமை என்று பண்டைய தமிழர்கள் நினைத்தார்கள். அது பற்றிய விழிப்புணர்வுகள்
அவர்களுக்கு இருந்தது.
நமக்கும் அது இருக்கிறதா இல்லையா
என்று கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment