Monday, June 16, 2025

சிக்கிம் பத்து சுவராசியமான செய்திகள் SIKKIM 10 INTERESTING FACTS

 

சிக்கிம் பத்து சுவராசியமான செய்திகள்

SIKKIM 10 INTERESTING FACTS

AWESOME SIKKIM LANDSCAPE

#ORGANICFARMINGSTATESIKKIM #TOURISTSPOTKANCHANCHUNGAMOUNTAIN #RARERHUBARBFLOWER #BUTANBORDER #GLACIERSINSIKKIM #RHODODENDRON #SIKKIMHIGHALTITUBELAKES #ORCHIDS #FOGSINSIKKIM

இந்தியாவின் அழகான மாநிலம் சிக்கிம் என்று எல்லோருக்கும் தெரியும், அந்த மாநிலம் பற்றிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று தெரியுமா ? பத்து சுவாரசியமான செய்திகளை இந்தப் பதிவில் தந்துள்ளேன் பாருங்கள்.

TEA LEAF PICKING

10 100 சதம் இயற்கை விவசாயம் செய்யும் நாடு ஆறு லட்சம் பேர் வசிக்கும் மாநிலம்.

2.   8586 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் கஞ்சன் சங்கா உலகின் மூன்றாவது பெரிய சிகரம்.

3.   இரண்டு மீட்டர் உயரத்திற்கு இருக்கும் ரூபார்ப் (RHUBARB) என்னும் பூ வகை வளரும் இடம் இது.

4.   பல நாடுகளை எல்லைகளாகக் கொண்ட மாநிலம் கிழக்கில் பூட்டான், மேற்கில் நேப்பாளம், வடக்கில் சைனா, இன்னொரு பக்கம் இருப்பது மேற்கு வங்காளம்.

BEAUTIFUL WATERFALLS

5.   உலகின் முதல் கலவையான பாரம்பரியங்களை உள்ளடக்கிய இடம் 18 கிளேசியர்கள், ஏரிகள், மலைச் சிகரங்கள், 18 வகையான காடு வகைகள், நீர் வீழ்ச்சிகள், 124 வகை பாலுட்டிகள், 55 வகைப் பறவைகள், 680 வகை உள்ளடக்கிய பட்டாம் பூச்சிகளை கொண்ட இடம்.

ORCHID FLOWERS
6.   அழகிய பூவகை ரோடோடெண்ட்ரானின் 35 வகைப் பூக்களை உடைய இடம், ரோடோடெண்ட்ரான் காடுகள் என்று சொல்லும் அளவுக்கு, அவை மிகுதியாக இருக்கும் இடம்.


7.   2015 ம் ஆண்டு முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம் என்னும் அந்தஸ்தை பெறும் மாநிலம் இது.

RIVER INBETWEEN PINE FOREST

8.   மிகுந்த உயரமான இடங்களில் இருக்கும் ஏரிகள் 22,  ஐந்து பெரிய வெந்நீர் ஊற்றுக்கள், 100 க்கும் மேற்பட்ட ஆறுகளை உள்ளடக்கியது.

9.  500 வகை பூக்கள் 515 அரியவகை ஆர்கிட்கள், 425 மூலிகைகள், 362 பெரணி வகைகள், எட்டு வகை மரப் பெரணிகள் ஆகியவற்றைக் கொண்டது.

10.  ஆண்டுதோறும் முறையாக பனிப்பொழிவு ஏற்படும் இந்திய மாநிலங்களில் ஒன்று.

நீங்கள் சிக்கிம் போயிருக்கிறீர்களா ? இதைவிட முக்கியமான இடங்கள் ஏதாவது இருக்கிறதா ? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அனுப்புங்கள்.

நன்றி, வணக்கம்.

பூமி ஞானசூரியன்

 

No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...