Saturday, June 14, 2025

ஆபத்தில் இருக்கிறோம் காப்பாற்றுங்கள் / MAY DAY MAY DAY

"மே டே"/ஆபத்தில் இருக்கிறோம்/ காப்பாற்றுங்கள்



விமான விபத்து நடப்பதற்கு முன்னால், அகமதாபாத் விமான நிலையத்திற்கு அந்த விமான ஓட்டி, "மே டே" என்று சொல்லி தகவல் அனுப்பி இருக்கிறார். 

இப்போது அந்த வார்த்தையை மிகவும் பிரபலமாக இருக்கிறது. "மே டே"  என்றால் என்ன என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

"மே டே" என்றால் என்ன ?அதற்கு என்ன பொருள் ? அது என்ன மொழி ?அது எந்த ஆண்டில் இருந்து பயன்படுத்துகிறார்கள் ?

Only man escaped from Air India Flight Accident Vishwashkumar

இதையெல்லாம் பார்க்கலாம் இந்த பதிவில்.

மே டே  என்றால் என்ன ?

இது ஒரு ஃபிரான்சு மொழியைச் சேர்ந்த வார்த்தை. பிரெஞ்சு மொழியில் இதனை 'எம் எய்டர், (M' aider) என்று சொல்லுகிறார்கள்.

அப்படி என்றால் உதவி செய்ய வாருங்கள் என்று அர்த்தம். இதனை முதன்முதலாக பயன்படுத்தியவர் மாக்போர்ட் (MOCKPORT)என்ற ரேடியோ ஆபரேட்டர்.

இவர் லண்டனில் இருக்கும் கிராய்டன் என்ற ஒரு ஏர்போர்ட்டில் பணி செய்தவர்.

"மே டே" என்றால் எஸ் ஓ எஸ் என்று தான் அர்த்தம். ஆனால் எஸ் ஓ எஸ் எஸ் என்பதை திரும்பத் திரும்பச் சொல்வது கடினமாக இருக்கும். அதனால் 'மே டே' என்பது சுருக்கமாக சுலபமாக இருக்கும் என்று இந்த வார்த்தையை உருவாக்கினார் மாக்போர்ட்.

"மே டே" என்ற வார்த்தையை 1927 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் இதனை மூன்று முறை சொல்ல வேண்டும்.ஆனால் அகமதாபாத் விமான விபத்தின் போது அந்த விமானி ஒரு முறை சொன்னாரா மூன்று முறை சொன்னாரா என்பது பற்றி தெரியவில்லை. 

வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் கூட " "மே டே"  என்பதைப் பயன்படுத்தக் கூடாது. சாதாரண பிரச்சனைகளை சொல்வது என்றால் அதனை பேன் கால் (Pan Call) என்று சொல்லுகிறார்கள்.

'பேன் பேன்'(pan pan) சொல்லும் செய்கைச் செயலும் ஒன்று உள்ளது, இதற்கு மிகவும் அவசரம் என்று அர்த்தம், இதுவும் சர்வதேச அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு சைகை வார்த்தை (signal proverb).

Pan pan என்பதும் Panne என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, இந்த வார்த்தைக்கு Break down என்று அர்த்தம்.

ஒரு கப்பல் அல்லது விமானம் அவசர உதவி தேவைப்படும்போது அனுப்பும் செய்தி  -  எஸ் ஓ எஸ்.

"நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்று அனுப்பும் செய்தி இது. 

தீயணைப்புத் துறை காவல் துறை போன்ற உதவி கோரும் இடங்களுக்குக் கூட இது போன்ற "எஸ் ஓ எஸ்" செய்திகளை அனுப்பலாம்.

MAY DAY #AIR INDIA FLIGHT #ACCIDENT#BHUMIIGNANASOORIAN #AHMADABAD / GUJARAT #WEAREINDANGER #CODEWORD #HELPREQUEST #

பூமி ஞானசூரியன்


No comments:

வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா ? - CAN INDIA PRODUCE PEANUT BUTTER AND SUPPLY THE WORLD ?

  வேர்கடலை வெண்ணையை நம்மால் தயாரிக்க முடியுமா?    தமிழில் நிலக்கடலை பற்றி கொச்சையாக வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ மல்லா...