Saturday, May 17, 2025

GROUNDNUT MILK IN PLACE OF COWS MILK பசும்பாலுக்கு பதிலாக நிலக்கடலை பால்...

#GroundnutMilk #PeanutMilk #InPlaceOfCowsMilk #GroundnutButter #GroundnutOil #GroundnutWine #TNAUAgriTechPortal #DoitYourselfAtHome #HowToPrepareAtHome #SimilarToSoyaMilkPreparation #AsNoonMealForSchoolChildren #AlternateToCowsMilk  #GeorgeWashingtonCarver #BlackLeonardo #gnanasuriabahavanacademy #bhumiiTrust #bhumiignanasurian #viralProgramme

பசும்பாலுக்கு பதிலாக 

நிலக்கடலை பால்...

GROUNDNUT MILK = COW'S MILK

பசும்பால் பற்றாக்குறை, மலிவான விலையில் பசும்பாலுக்கு இணையான பால் வினியோகம், பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவை ஊட்டமிகு உணவாக மாற்றுதல் போன்றவற்றிற்கு நிலக்கடலை பால் எப்படி மாற்றாக அமையும் என்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உதவும்.

நிலக்கடலையில் மதிப்புக் கூட்டுதல் மூலமாக என்னென்ன பொருட்களை செய்ய முடியும் ?

நிலக்கடலையிலிருந்து எண்ணெய்,  பால்,  வெண்ணைய், வறுத்தகடலை, பிண்ணாக்கு, கேக், ஓயின் ஆகியவற்றை எல்லாம் தயார் செய்ய முடியும்.

ஆனால் இந்தியாவில் நிலக்கடலையை பெரும்பங்கு எண்ணை எடுப்பதற்காக பயன்படுகிறது

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில், (TNAU AGRITECH PORTAL) நிலக்கடலையில் பால் , வெண்ணை,  எண்ணெய், பிண்ணாக்கு, ஆகியவற்றை மதிப்புக் கூட்டுதல் (VALUE ADDITION) செய்ய முடியும் ?  அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்றும் தகவல்கள் உள்ளன.

நிலக்கடலை பால் தயாரிப்பது எப்படி ?

முதலில் நல்ல தரமான நிலக்கடலையை தேர்வு செய்து எடுத்து கொள்ளுங்கள்,

அதனை சுத்தம் செய்து, வறுத்து, அவற்றின் சிவப்பு நிறத் தோல் மற்றும் கடலைப் பறுப்புகளின் ஊடாக இருக்கும் முளைக் குருத்துக்களை நீக்கி, பின்னர் முளைக்குருத்துகள் நீக்கப்பட்ட பறுப்புக்களை அரைத்து, சீரான கூழாக தயாரித்து, இந்தக் கூழினை 7 மடங்கு தண்ணீருடன் நன்கு கலந்து, அத்துடன் கால்சியம் ஹைட்ராக்சைடு ரசாயனம் சேர்த்து, அதன் கார அமில நிலையை 6.8 ஆக மாற்றி, அத்துடன் டை சோடியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் பாஸ்பேட் நிலக்கடலை பாலை ஸ்திரப்படுத்துதல் வேண்டும்.

இந்த நிலக்கடலை பாலை வடிகட்டி அத்துடன் ஏ,டி,பி2, ஃபோலிக் ஆசிட், பி12 மற்றும் கால்சியம், அயன், ஆகிய தாது உப்புக்களை சேர்க்க வேண்டும்.

 அத்துடன் நிலக்கடலை பாலுக்கு இனிப்பு சேர்க்க 7 சதம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

 இப்படி தயார் செய்த நிலக்கடலை பாலை ஹேமோ ஜினைஸ் மற்றும் நீராவி மூலமாக பதப்படுத்தினால் நிலக்கடலை பால் தயார்.

இந்தப் பாலை பாட்டில்களில் அடைத்து குளிர்பதனப் பெட்டிகளில் சேமிக்க வேண்டும்

சோயா மொச்சைப் பாலைப்போல இந்த நிலக்கடலைப் பாலை பயன்படுத்தலாம். பசும்பாலுக்குப் பதிலாகக் கூட இதனைப் உபயோகப்படுத்தலாம். சத்து நிறைந்த இந்தப் பாலை பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இதனை பயன்படுத்தத் தொடங்கினால் சிறந்த குழந்தை உணவாக மாறும் வாய்ப்பு உண்டு.


நிலக்கடலை பாலை கண்டுபிடித்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற விவசாய விஞ்ஞானி.

இவர் தாவரவியல் அறிஞர் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாத்த அறிவியல் அறிஞரும் கூட. 1860 ம் ஆண்டு அமெரிகாவில் மிசவுரியில் பிறந்தவர் 1943 ம் ஆண்டு வரை வாழ்ந்து பல அரிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியவர் நிலக்கடலையில் அவர் 100 வகையான பொருட்களை உருவாக்கியவர் அவர்தான்.

நிலக்கடலையிலிருந்து அழகு சாதனப் பொருட்கள், சாயங்கள், பெயிண்டுகள், பிளாஸ்டிக்குகள், ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்

1941 ம் ஆண்டு டைம் பத்திரிக்கை இவரை பிளாக் லியனார்டோ என்று எழுதியது.

GEORGE WASHINGTON CARVER
(Founder of Groundnut Milk)

நிலக்கடலை மாவுடன் கொஞ்சம் எண்ணெய், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கொஞ்சம் நிலக்கடலை சாம்பல், மற்றும் தண்ணீர் சேர்த்து இந்த பாலை தயார் செய்தார்.

அப்படி தயார் செய்தபால் பசும்பாலுக்கு சமமாக இருந்ததாம் பசும்பாலுக்கும் அதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்கிறார்கள். ஆனால் பசும்பாலைவிட மிகவும் மலிவாக தயாரிக்க முடியும் என்று சொன்னார் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

பசும்பாலுக்கும் நிலக்கடலை பாலுக்கும் என்ன வித்தியாசம் ?

ஒரு கப் பசும்பாலில் அதாவது டயரி மில்க் ல் இருப்பது போல நிலக்கடலை பாலிலும் 8 கிராம் புரதம் அடங்கி உள்ளது. அத்துடன் நிலக்கடலை பாலில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இன்னொரு முக்கியமான அம்சம் நிலக்கடலை பால் கொலஸ்ட்ரால் இல்லாதது என்பது அத்துடன் வேகன் கோவர் மற்றும் டயரி கொலஸ்ட்ரால் ஹார்மோன் மற்றும் லேக்டோஸ் இல்லாதது என்று நேஷனல் பீநட் போர்டும் சொல்லுகிறது

வளரும் நாடுகளுக்கும் வளராத நாடுகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்

வளரும் நாடுகள் மற்றும் வளராத நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது புரதப் பற்றாக்குறை.

இந்த பிரச்சனையை அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடியாது காய்கறிகள் மூலமாக கிடைக்கும் புரதம் மட்டும்தான்.

இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நிலக்கடலை பாலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பால் வகைகளை ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொய்யா பழங்களின் தசையை சேர்த்து ஒருவகையான நிலக்கடலை பாலை தயார் செய்துள்ளார்கள்.

அது போலவே உம்பு பழத்தசையையும் பயன்படுத்தி ஒரு வகையான நிலக்கடலை பாலை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நிலக்கடலையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 

இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று ஜர்னல் ஆப்தி சவூதி சொசைட்டி ஆஃப் அக்ரிகல்சரல் சைண்டீஸ்ட்ஸ், 2015 ம் ஆண்டு வெளியிட்டுள்ளது அதற்கான இணைப்பினை கீழே தந்துள்ளேன்.

References Fir Further Reading

1.     Preparation of groundnut milk and its qualitative analysis / https://www.researchgate.net

2.     How to make peanut milk? The Almond Eater / https://www.thealmondeater,com

3.     25 Easy and tasty groundnut milk recipes by home cooks / Cookpad /https://www.cookpad.com

4.     DIY Peanut Milk: Easy Step By Step Guide / National Peanut Board / https://www.nationalpeanutboard.org

5.     Preparation of groundnut milk and its qualitative analysis ? CABI Digital library/ https://www.cabidigitallibrary.org

6.    

 

 


No comments:

GROUNDNUT MILK IN PLACE OF COWS MILK பசும்பாலுக்கு பதிலாக நிலக்கடலை பால்...

#GroundnutMilk #PeanutMilk #InPlaceOfCowsMilk #GroundnutButter #GroundnutOil #GroundnutWine #TNAUAgriTechPortal #DoitYourselfAtHome #HowToPr...