Wednesday, May 14, 2025

இன்று நீ நாளை நான்- ரூபியின் நினைவாக HE GAVE ALL, TOOK NOTHING - A SOUL REMEMBERED

 #BrotherTribute #RubyLifeStory #FromRichesToRags #FinalStoryOfaSelflessSoul #DeathAndRemembrance #GenerosityAndBetrayal #EmotionalFarewell #TamilTribute #PoeticTributetoaGenerousMan

      இன்று நீ நாளை நான் 

ROOBALLAVANYA BAHAVAN D
       ரூபல்லாவண்ணிய பகவான்

எனது ஐந்து தம்பிகளின் நான்காவது தம்பி.

ஆசிரியர் தேவராஜ் மங்கலட்சுமி தம்பதியரின் நவரத்தினங்களின் இவன் எட்டாவது ரத்தினம்.

வேகமாகப் பேசினால் அதற்கு வலிக்கும் என்று மிருதுவான மொழியில் பேசுவான்.

நிறைய பேர் புகைப்படம் எடுப்பவர் சொன்னால் மட்டுமே சிரிப்பார்கள் சிரமப்பட்டு.

என் தம்பியிடம் சிரிக்காமல் இருக்க யாராச்சும் சொல்ல வேண்டும்.

அவன் உதடுகளில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் ஒரு மெல்லியப் புன்னகை.

கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள் என்பது தெரிந்த சொலவடை.

இவனைச் சுற்றி இருப்பவர்கள் கைகள் சிவந்திருக்குமாம், வாங்குபவர் கை சிவக்கக் கொடுப்பானாம்.

பருவக்காலங்களில் மட்டுமே இருகரை நிறைய நீர் போகும்.

ஜீவநதிகள் நீரோட்டம் இல்லாத காலத்தும் ஊற்றோட்டத்தை உள்ளே வைத்திருக்கும், ரகசியமாக.

ரூபாலவண்ணின் கடுகளவு தண்ணீரையும் தனது ஆற்றுப் படுகையில் தேக்கி வைத்துப் பழகாத காட்டாறு அவன்.


தன் வீட்டை சுத்தம் செய்கிறதே என்று துடைப்பங்களுக்குக் கூட பட்டுக்குஞ்சம் கட்டி அழகு பார்த்தவன் அவன்.

ரூபாய் நோட்டுக்களைய் பார்க்கும் போது தெல்லாம் நிறைய பேருக்கு என் மனதில் காந்திமகான் வந்து போவார்.

கொஞ்சம் நாட்களாய் எனக்கு ரூபாய் நோட்டுக்களை பார்த்தால் ரூபிதான் ஞாபகத்தில் வந்து போவான்.

0   0   0

ஒரு நாள் அவன் பழக்கடைக்கு போனானாம், மா, பலா, வாழை, ஆப்பிள், பேரி, மங்குஸ்தான், திராட்சை, என அடுக்கி இருக்க, இருபது முதல் அறுபது வயதுவரை, பழக்கடை அனுபவப்பாட்டி ஒன்று, பழங்களின் சத்து பற்றி பட்டியல் போட்டதாம். அத்தனையிலும் ஐந்தைந்து என்றானாம். அத்தனையும் ஒரு கூடையில் அடுக்கி "எழுநூறு ரூபாய்தான் மலிவு விலை" என்று விழாமல் இருந்த, ஒற்றைப் பல் காட்டி சிரித்ததாம். எழுநூறு ரூபாய் சில்லரையாய் இருந்தும், இரண்டு 500 ரூபாய் தந்தான் ரூபி. மீதி 300 என்றது பாட்டி. "வைத்துக்கொள்" என்றான் றூபி. "அது மகராசனாய் இரு" என்று வாழ்த்த இன்னும் ஒரு 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தான் ரூபி.

      இதுதான் ரூபல்லா வண்ணிய பகவான்

0       0     0

இன்று அவன் இல்லை

அவனிடம் வாங்கி கைசிவந்த உறவுகள் இன்று சொல்லுகின்றன "ஆணவக்காரன்".

அவன் பணத்தை மதிக்காதவன்தான்

பணத்திற்குப் பின்னால் பதாகை பிடித்து நடந்தார்கள் அவனைச் சுற்றி இருந்த பலர்.

அவன் மட்டும் ஒற்றை ஆளாய் நடந்தான்.

பணம் அவறுக்கு பதாகை பிடித்து நடந்தது.

பணம் அவனோடு போட்டி போட்டது.

"உன்னைக் கொன்று விடுவேன்" என்றது பணம்

"இப்போதும் நான் போகும் இடத்திற்கு நீ வரமுடியாது..  இனி உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.. எப்போதும் நீ என்னை ஆளமுடியாது.." என்று சொல்லாமல் சொல்லி இருந்தப் பூவுலகிலிருந்து விடை பெற்றான், ரூபி.

2025 ம் ஆண்டு மே மாதம் 10 ம் நாள் அவன் மருத்துவமனை ஒன்றில் இறந்து விட்டான் என்று அறிவித்தார்கள். 

ஆனால் அவன் என்னோடு இன்னும் பேசிக் கொண்டிருக்கிறான் அவன் சாகவில்லை.

அவனுக்கு வேலை ரிசாவ் பேங்கில். ரூபாய் நோட்டுக்களில் படுத்துக்கொண்டே வேலை பார்ப்பான். ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் வேலை. "அதற்கு எந்த பேப்பர் சரிப்படும் ?" சீனாவக்குப் போவான் ஜப்பானுக்குப் போவான். இந்திய நாட்டில் பல மாநிலங்களுக்கும்   ரயில் பெட்டிகளின் பணம் எடுத்துக் கொண்டு போவான், அவன் முன்னால் போவான் பின்னால் இரண்டு ஏகே 47 பாதுகாப்புக்குப் போகும்.

பணத்திற்கும் புது இடங்களைப் பார்க்கப்பிடிக்கும். புது மனிதர்களை சந்திக்கப் பிடிக்கும். பதுக்கிவைப்பவர்களை அதற்குப் பிடிக்காது. புதைத்து வைப்பவர்களையும் அதற்குப் பிடிக்காது.

பணம் ஒருவரைத் தேடிப் போனால் மகிழ்ச்சி. அவரை விட்டு ஓடிப்போனால் தாழ்ச்சி. அது தொடர்ந்து ஓடினால் வீழ்ச்சி.

"ஊருணி நீர் நிறைந்தற்றே 

உலகவாம்  பேரறரி வாளன் திரு" 

(215 வது திருக்குறள்)

ரூபி ஊரின் நடுவே ஊருணியாய் நீர் நிறைந்து நின்றான். முறையோரின் தாகம் தீர்த்தான் எனக்குத் தெரியும் பல பேர் பலவிதமாய் பேசு வார்கள் உலை வாயை மூடினாலும் உலை வாயை மூடமுடியாது

ஏசு நாதரைக் கூட சிலுவையில் ஏற்பே உலகம் இது நபிகள் நாயகத்தைக்கூட கல்லெறிந்து துரத்திய உலகம் இது உலகம் உருண்டை உண்மை உறைத்த கல்வியோவை கழுவில் ஏற்ற துடித்த உலகம் இது எதையும் கேள்வி கேட்டு உலகப் புரிந்துகொள் என்று சொன்ன சாக்ராபீளக்கு கோப்பை நிறைய விஷம் தந்து குடிக்க சொன்ன உலகம் இது

இன்று நீ நாளை நான்

பூமி ஞான சூரியன்


 

No comments:

இன்று நீ நாளை நான்- ரூபியின் நினைவாக HE GAVE ALL, TOOK NOTHING - A SOUL REMEMBERED

 #BrotherTribute #RubyLifeStory #FromRichesToRags #FinalStoryOfaSelflessSoul #DeathAndRemembrance #GenerosityAndBetrayal #EmotionalFarewell ...