Wednesday, May 14, 2025

உணவிற்கு ஊட்டமும் உடலுக்கு உறுதியும் தரும் தண்டுக்கீரை - NUTRITIOUS AMARANTHUS GREENS: A POWERHOUSE OF HEALTH

#AmaranthusGreens # DhndukeeraiHealthBenefits #TamilTraditionalGreens #NutritionalLeafyVegetables #SouthIndianDiet #KeeraiVaritiesInTamilnadu #IronRichGreens #HealthyTamilFood #OrganicLeafyGreens

தண்டுக்கீரை 

RED AMARANTHUS

(AMARANTHUS DUBIUS)

நிறைய வீடுகளில் குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. 

சில குழந்தைகள் மருந்து சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகின்றன.

பல வீடுகளில் பெரியவர்களேகூட கீரை சாப்பிட யோசனை செய்கிறார்கள்.

இதுபற்றிய விழிப்புணர்வு குறைவு, அதனை ஈடு செய்யத்தான் இந்தப்பதிவு.

v அறுக்கீரை அல்லது தண்டுக்கீரை தமிழகத்து சமையலில் இடம் பெறும் முக்கியக் கீரை.  

        நாம் அதிகமாகப் பயன்படுத்தும் கீரைகளில் ஒன்று.

v  இதன் இலைகளை மட்டும் பறித்தும் அறுத்தும் சமைக்கலாம், அதனால்தான் இது அறுக்கீரை. 

v  தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் சர்வதேசக் கீரை.

GREEN AMARANTHUS
மகப்பேறு பெற்ற பெண்களுக்கு நல்லது, அதனால் ஏற்படும் உடல் மெலிவை சரி செய்யும், உடலுக்கு சக்தியும் பலமும் தரும்.

vதோசை, சூப்பு, கூட்டு, மசியல் இப்படி பலவகைகளில் சமைத்து சாப்பிடலாம்.

vசித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர்ஜன்னி நோய்களுக்கு அற்புத மருந்தாகிறது.

v 2 x 1.5 மீட்டர் அளவு கொண்ட பாத்திகளில், ஒரு எக்டருக்கு 325 கிராம்  விதைகளை விதைக்க வேண்டும்.

 முளைத்த இளம் செடிகளை 10 -15 செ.மீ இடைவெளி இருக்குமாறு கலைத்து விட வேண்டும், ஒரு எக்டருக்கு 2 டன் மண்புழு உரம் அல்லது 5 டன்  தொழு உரம் கீரை  சீராக  வளர உதவும். 22 முதல் 30 நாட்களில் அறுவடைக்கு வரும்.

100 கிராம் தண்டுக்கீரையில்  வைட்டமின்களும், தாது உப்புக்களும் ஊட்டம் தரும் சத்துக்களும் நிரம்ப உள்ளன.

கலோரிச்சத்து - 23 கிலோ கலோரிச்சத்தும், கார்போஹட்ரேட்டு - 4.02 கிராம், புரதம் 4.02 கிராம்,  நார்ச்ச்த்து - 2.2 கிராம், மற்றும் வைட்டமின் எ , சி, மற்றும் கே வும் நிறைந்துள்ளது. 

இவை தவிர, சுண்ணாம்புச்சத்து, தாமிரம், இரும்பு, மக்னீசியம், மேங்கனீசு, பாஸ்பரஸ், துத்த நாகம் ஆகிய தாது உப்புக்களும் தண்டுக்கீரையில் ஊட்டம் சேர்க்கின்றன.

100 கிராம் தண்டுகீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விவரம்.

AMARANTHUS DUBIUS

(USDA National Nutrient Data Base)

Energy  23 Kcal

Carbohydrates 4.02 g

Protein 2.42 g

Total Fat 0.33 g

Cholestrol 0 mg

Dietary Fiber  2.2 g

VITAMINS

Niacin    0.658 mg

Pantothenic Acid 0.065 mg

Pyridoxine 0.192 mg

Riboflavin 0.158 mg

Thiamin  0.027 mg

Vitamin A  2917 IU

Vitamin C 43.3 mg

Vitamin K 1140 Ug

ELECTROLYTES

Sodium  20 mg

Potassium 611 mg

MINERALS

Calcium 215 mg

Copper  0.162 mg

Iron       2.32 mg

Magnesium  55 mg

Manganese  0.885 mg

Phosphorus  50 mg

Zinc             0.90

1. இன்று முதல் தண்டுக்கீரையை உங்கள் உணவில் சேர்த்துப் பாருங்கள்.

2. உபயோகமான இந்தப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

3. உங்கள் பிரியமான தண்டுக்கீரை சமையல் முறையை எழுதுங்கள்

4. நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் அறிந்துகொள்ள நமது வலைத்தளத்தை பின்தொடருங்கள். 

5. உங்கள் ஆரோக்கியப் பயணத்திற்கு தண்டுக்கீரையை பிள்ளையார் சுழி ஆக்குங்கள்.

பூமி ஞானசூரியன்









No comments:

இன்று நீ நாளை நான்- ரூபியின் நினைவாக HE GAVE ALL, TOOK NOTHING - A SOUL REMEMBERED

 #BrotherTribute #RubyLifeStory #FromRichesToRags #FinalStoryOfaSelflessSoul #DeathAndRemembrance #GenerosityAndBetrayal #EmotionalFarewell ...