அன்டார்டிகாவுக்கு எப்படி போகலாம் ?
HOW CAN WE GO TO ANTARTICA ?
#HOWCANWEGOTOANTARTICA #TRAVELBYCRUISESHIP #SUMMERSUITABLETIME #PORT LOCKERYMUSEUM #ICESHELF #DRAKEPASSAGE #ANTARTICAPENINSULA #PALKANDISLANDS
அன்டார்டிக்காவுக்கு எப்படி போகலாம், எப்போது
போகலாம் ? அங்கு என்னென்ன பார்க்கலாம் ? அங்கு எங்கு தங்கலாம் ? எல்லாம் தெரிந்துகொள்ளலாம்,
இந்தப் பதிவைப் படியுங்கள்.
அன்டார்டிகாவுக்கு தனியாக ஒரு கொடி 2002 ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அன்டார்டிகா மக்கள் தொகை 5000 பேர்,
யாரும்
அங்கு வசிக்கவில்லை, ஆனாலும் 1000 – 5000 பேர் இருப்பதாக சொல்லுகிறது புள்ளிவிவரங்கள். அவர்கள் அநேகமாக ஆராய்ச்சி நிலையங்களில் பணி செய்பவர்களாக இருக்கலாம். 29 நாடுகளில் 70 ஆராய்ச்சி நிலையங்கள் இங்கு இருக்கின்றன.
அன்டார்டிகா பார்க்க எப்போது போகலாம் ? கோடையில் போகலாம், நவம்பர் முதல் மார்ச் வரையான 5 மாதங்கள் கோடைகாலம், முக்கியமாக விலங்குகளை பார்க்கலாம், அந்த மாதங்களில் 24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் இருக்கும் என்கிறார்கள். பத்து நாட்கள் அன்டார்டிகாவை சுற்றிப்பார்க்க போதுமானது.
எப்படி பயணம் செய்யலாம்
குரூஸ் ஷிப் என்னும் உல்லாசமான கப்பல்கள் இருக்கின்றன. அவற்றின் மூலமாக செல்லும்போது உங்களுக்கு தங்கும் இடம், சாப்பாட்டு, விடுதிகள், தேடுவது, அந்தப் பகுதிக்கு ஏற்ற உடைகளை ஏற்பாடு செய்வது, இதில் எல்லாம் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
இங்கு பயணம் செய்வதற்கென சிறப்பாக, பிரத்தியேகமான, தனித்துவமாக, தயாரிக்கப்பட்ட குரூஸ் ஷிப்புகள் இருக்கின்றன. கப்பல் என்பது ஏறத்தாழ நமது வீடுமாதிரி தான், 33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாதகாலம் கப்பலில் பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு.
அன்டார்டிகாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
![]() |
Penguins of Antarctica |
போர்ட் லாக்கரி மியூசியம் (PORT LOCKERY MUSEUM), அங்கு உள்ள பனிப்பாறைகள்(ICE SHELF), டிரேக் பேசேஜ்(DRAKE PASSAGE), அன்டார்டிகா பெனின்சுலா(ANTARTICA PENINSULA), பாக்லேண்ட் ஐ லேண்ட்ஸ்(PALKAND ISLANDS), பிராணிகள் மற்றும் பறவைகள், சவுத் ஷெட்லேண்ட் ஐ லேண்ட்ஸ்(SOUTH SHEDLAND ISLANDS), சவுத் ஜார்ஜியா (SOUTH GEORGIA).
எலிபெண்ட் சீல்ஸ்: சவுத் லெட்லேண்ட் தீவுகளில் இந்த வகை சீல் களைப் பார்க்கலாம்.
ஆராய்ச்சி நிலையங்கள்
29 நாடுகள் இங்கு ஆராய்ச்சி நிலையங்களை வைத்துள்ளன. முக்கியமான மற்றும் பெர்மனெண்ட் ஆராய்ச்சி நிலையங்களை வைத்துள்ள நாடுகள் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சைல், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆகியவை மொத்தம் 70 ஆராய்ச்சி நிலையங்கள் இங்கு உள்ளன.
அன்டார்டிகா எங்கு உள்ளது
தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆகியவை இந்த உலகின் தெற்குப் பகுதியில் உள்ளன. உலக வரை படத்தில் கீழ்ப் பகுதியில் அன்டார்டிகாவைப் பார்க்கலாம்.
அர்ஜென்டினா, சைல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆகிய நாடுகள் மிகவும் அருகாமையில் இருக்கும் கடல் எல்லைகள். அர்ஜென்டினா, மற்றும் சைல் தெற்கு பசிபிக் சமுத்திரம், இந்து மகா சமுத்திரம், தெற்கு அட்லாண்டிக் சமுத்திரம், ஆகிய நீர் எல்லைகளுக்குள் உள்ளது அட்லாண்டிக் மகா சமுத்திரம்.
அன்டார்டிகா எவ்வளவு உயரம் தண்ணீர் தேங்கி நிற்கும்
அன்டார்டிகா கண்டத்தில் இருக்கும் ஐஸ் மலைகள் உருகினால் உலகம் தண்ணீரில் மூழ்கி உலகம் அழிந்துவிடும் என்கிறார்கள் உண்மையா ?
ஆமாம் அது உண்மைதான் இங்கு இருக்கும் ஐஸ் மலைகள் பனிப்பாறைகள் பனிக்கட்டிகள் தூள், பனிகள் இவை எல்லாம் உருகினால் அதனால் ஏற்படும் வெள்ளம் நமது பூமியின் மீது 70 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிற்கும் என்கிறார்கள்.
70 மீட்டர் என்பது 230 அடி நம்ம ஊரில் 236 அடி உயரத்திற்கு தண்ணீர் என்றால் கற்பணை செய்து பாருங்கள் பனை மரங்கள் சாரசரியாக 15 முதல் 20 மீட்டர் உயரம் வளரும் அதிக பட்சமாக 30 மீட்டர் உயரம் வளரும் கிட்டத்தட்ட எட்டு பனை மரம் உயரத்திற்கு தண்ணீர் தேங்கும்.
அன்டார்டிகா நாம் போக முடியுமா ?
போக முடியும் குரூஸ் கப்பல்கள் மாதிரி குரூஸ் விமானங்கள் அன்டார்டிகாவுக்கு போகின்றன. அன்டார்டிகாவில் ஹேட்டல்கள், லாட்ஜுகள் ஏதும் இல்லை. பிரயாணம் கப்பல்களிலேயே தங்கிக்கொள்ளலாம், அருகில் உள்ள நாடுகள், அர்ஜெண்டினா, சைல் மற்றும் நியூசிலாந்தில் தங்கிக் கொள்ளலாம், அல்லது கேப் டவுன்’ல் தங்கிக் கொள்ளலாம்.
அன்டார்டிகா போக பாஸ்போர்ட் வேண்டுமா ?
வேண்டும், எந்த நாட்டின் வழியாகப் போக திட்டமிடுகிறோமோ அதற்கும் சேர்ந்து வாங்க வேண்டும். இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவில் கேப்டவுன் வழியாகப் போவது என்றால், இந்தியா டூ கேப்டவுன் 8812 கிலோ.மீட்டர், அங்கிருந்து அன்டார்டிக்கா 4697 கிலோ.மீட்டர், ஆக மொத்தம் 13509 கிலோ.மீட்டர். இதைவிட சுருக்கமா போக வழி இருந்தா சொல்லுங்க.
ஆர்டிக் என்பது வடதுருவம் அன்டார்டிகா தென் துருவம்
ஆர்டிக் என்பது சமுத்திரம் 5.5 மில்லியன் சதுர மைல் பரப்புடைய சமுத்திரம். சுற்றிலும் நிலப்பரப்பு உள்ள இந்த சமுத்திரத்து நீரில் எப்போதும் மெல்லிய தகடுபோல பனி உறைந்து நிற்கும்.
அன்டார்டிகா என்பது ஒரு கண்டம் ஆசிய, அமெரிக்கா, ஐரோப்பிய கண்டம் போல இதன் பரப்பு 5.4 மில்லியன் மைல்.
துருவம் கரடிகளும் பென் குவின்களும்
பனிக்கரடிகள் இருப்பது ஆர்ட்டிக் பகுதியில், வட துருவத்தில் இருப்பது பென் குவின்கள் அன்டார்டிகாவில்.
அன்டார்டிக்காவில் வாழும் நான்கு முக்கிய உயிர்னிங்கள், பென்குவின்கள் திமிங்கலங்கள்,சீல்கள் மற்றும் அல்பெட்ரஸ் எனும் ராட்சக் கடல் பறவைகள்.
அன்டார்டிகா திமிங்கலங்கள்
ஆர்காஸ் என்பவை ஆளை சாப்பிடும் திமிங்கலங்கள். அன்டார்டிகாவின் சதர்ன் ஒவன்’ல் தான் 25600 முதல் 27000 திமிங்கலங்கள் இருக்கின்றன.
அன்டார்டிகாவின் மரங்கள்
280 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கோண்டுவானா என்ற பெயரில் இருந்த நிலப்பகுதிதான் இன்றைய அன்டார்டிகா. கோண்டுவானாவில் மரங்கள் இருந்தன. அந்த மரங்களின் அடிமரக்கட்டைகள் வேர்ப்பகுதிகளுடன் இன்னும் சில இடங்களில் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.
பாம்புகள் இல்லை
உலகில் மொத்தம் 2900 வகை பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் பொதுவாக நிலத்தில் நீரில் மற்றும் மரங்களில் வசிக்கும். ஆனால் ஆண்டு முழுவதும் பனியும் பனிகட்டியுமாய் இருக்கும். இடங்களில் அவை வசிக்காது என்கிறார்கள். ஆட்க்டிக் மற்றும் அன்டார்டிகா இரண்டும் இதற்கு சரிப்படாது என்கிறார்கள்.
பென் குயின்கள்
உலகிலேயே பென் குயின்களின் தலைமைப் பிரதேசம் நியூசிலாந்துதான். மொத்த உலகில் 19 வகை பென் குயின்கள் உள்ளன. அன்டார்டிகாவில் ராஸ்சி என்ற பகுதியிலும் பென் குயின்கள் அதிகம், 4 – 5 வகையான பென் குயின் வகைகள் அன்டார்டிகாவில் உள்ளன. நாய்கள், பூனைகள், எலிகள், நரிகள், ஆகியவை இவற்றை வேட்டையாடுகின்றன.
மிகவும்
உதவியாக இருக்கும். இந்த வலைத்தளத்தின் பின்தொடர்பவராக பதிவு செய்துகொள்ளுங்கள்.
பூமி ஞானசூரியன்.
No comments:
Post a Comment