சிக்கிம் ரூபார்ப் பூ எப்படி இருக்கும் ?
HOW IS RHUBARB FLOWER OF SIKKIM ?
#RHUBARBFLOWER #SIKKIMHOTSPRINGS #SIKKIMBUTTERFLIES #RHODODENDRON SANTUARY#SIKKIMORCHIDFLOWERS #KANCHANCHUNGAMOUNTAIN #BHUTTIYAPEOPLE #LEPPACHAPEOPLE
![]() |
#RHUBARB FLOWER |
சிக்கிம் மாநிலத்தின் வித்தியாசமான பூச்செடிதான் இந்த ரூபார்ப். இதன் பூ ஆறடி உயரம் இருக்கும். கூம்பு வடிவத்தில் இருக்கும் மஞ்சள்நிற இலைகளை அடுக்கிவைத்தது போல தெரியும்.
இந்தப் பூக்கள் பூத்திருப்பதை ஒரு மைல் தொலைவில் இருந்துகூட பார்க்கலாம். சிக்கிமின் 14000 அடி உயரமான மலைப்பகுதிகளில் இந்த அதிசய வகைப் பூ ஆறடி உயரத்திற்கு நின்றிருக்கும். “பனிப்பகுதியில யார் இந்த ஐஸ்கிரீம் ‘ஐ செஞ்சி வச்சிருக்காங்க” என்று கேட்கத் தோன்றும்.
‘ரீயம் நொபிலி’(RHEUM NOBILE) என்பது இதன் அறிவியல் பெயர். இந்த சிக்கிம் ரூபார்ப் பூவைத்தான் மஹாமேரு பூ என்றும், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்றும் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’பில் செய்திகள் வருகின்றன. ஆனால் சிக்கிம் ரூபார்ப் ஆண்டுதோறும் பூக்கும் சிக்கிம் மேருமலர்.
சிக்கிம் வெந்நீர் ஊற்றுக்கள் (SIKKIM HOTSPRINGS)#SIKKIM HOTSPRINGS
ரேஷி, ஹாட் ஸ்பிரிங், ரேலாங் ஹாட் ஸ்பிரிங், போராங் ஹாட் ஸ்பிரிங், பாம் தாங் ஹாட் ஸ்பிரிங், யூம் சாம் டாங் ஹாட் ஸ்பிரிங், இப்படி ஐந்து பிரபலமான வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.
25 கிலோ மீட்டர் முதல் ஐந்தாறு கிலோ மீட்டர் ஒடும் வெந்நீர் ஊற்றுக்களும் உள்ளன. கொப்பளிக்கும் ஆவியுடன் ஊற்றுக்களில் வெந்நீர் வெளிப்பட்டு ஒடையாக ஓடுகிறது. புகையுடன் ஓடும் இந்த வெந்நீரில் அதிகப்படியான சல்பர் என்னும் கந்தகம் இருக்கிறது. இதில் குளிப்பதால் பலவிதமான நோய்கள் குணமாகும்.
பட்டாம் பூச்சிகளின் மாநிலம் (
![]() |
#SIKKIM BUTTERFLIES |
SIKKIM BUTTERFLIES)
இதனை பட்டாம் பூச்சிகள் மாநிலம் என்று சொல்லலாம். 700 வகையான பட்டாம் பூச்சிகள் இங்கு இருக்கின்றன. பாரம்பரியமான விவசாய முறைகளை வெகுகாலமாக பின்பற்றி வருகிறார்கள்.
100% இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாகவும் இருப்பதால் தான் இத்தனை வகையான பட்டாம் பூச்சிகள் இன்னும் இருக்கின்றன. சிக்கிம் இயற்கை விவசாயம் பல்வேறு வகையான தாவரங்கள், மற்றும் பிராணிகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள், மற்றும் தேனிக்கள் பலகிப்பெருக வாய்ப்பாக இருக்கிறது என்கிறார்கள் சிக்கிம் வேளாண்துறை நிபுணர்கள்.
சிக்கிம் ஏலக்காய் மற்றும் மேண்டரின் ஆரஞ்சு தோட்டங்களில் மட்டுமே 268 வகையான பட்டாம் பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
ரோடோ டெண்ட்ரான் சரணாலயம் (
![]() |
#RHODODENDRON SANTUARY |
ரோடொ டெண்ட்ரான் பூ மரங்களுக்கு இங்கு ஒரு சரணாலயம் உள்ளது. இது 104 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ‘வர்சி ரோடோ டெண்ட்ரான் சரணாலயம் ’(VARSEY RHODODENDRAN SANCTUARY) என்று பெயர். சிக்கிம் மாநிலத்தில் 26 வகையான ரோடோடெண்ட்ரான் வகைகள் உள்ளன. ரோடோ ஏப்ரல் மே மாதங்களில் பூக்கும்.
இது சிக்கிம் மற்றும் உத்ரகாண்ட் மாநிலங்களின் மாநில மரம் அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜினியா மாநிலங்களின் அரசு மரமும் ரோடோடெண்ட்ரான் தான் இதில் மொத்தம் 1024 வகைகள் இருக்கின்றன. அதில் 26 வகைகள் சிக்கிமில் உள்ளன ரோடோடெண்ட்ரான் வகைகளில் சுமார் 1000 வகைகள் இமயமலைப் பகுதிகளில் உள்ளன.
![]() |
#SIKKIM ORCHID FLOWERS |
(SIKKIM ORCHID FLOWERS)
உலகில் மொத்தம் 28000 வகைகள் உள்ளன. இந்தியாவில் இருக்கும் ஆர்கிட் வகைகள் மொத்தம் 1229. அதில் சிக்கிமில் இருப்பவை மட்டும் 523 வகைகள். ஆர்கிட் பூ வகைகளை அதிகம் கொண்ட இரண்டாவது இந்திய மாநிலம் என்ற பெருமை உடையது.
சிக்கிம் 20 ஆர்கிட் வகைகளை உடைய அருணாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆர்கிட் பூக்களைப் பொருத்தவரை சிக்கிம் மிக முக்கியமான ஹாட்ஸ்பாட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கிட் பூக்கள் பெரும்பாலானவை வண்ண மயமானவை, வித்தியாசமான, வடிவில் நறுமணம் மிக்கவைகளாக இருக்கும்.
![]() |
#KANCHANCHUNGA MOUNTAIN |
உலகின் மூன்றாவது மிக உயரமான மலைச்சிகரம் கஞ்சன் சங்கா சிக்கிமில்தான் இருக்கிறது. இதன் உயரம் 28169 அடி அல்லது 8586 மீட்டர் இமையமலையின் ஒரு பகுதி இது ஒரே வரியில் சொல்வதனால் கஞ்சன் சங்கா என்பது பனிச்சிறுத்தைகளும், கரும்கரடிகளும், அஸ்ஸாமின் கிளிகளும், பறந்து திரியும் பனிப்பிரதேசம். ரோடோடெண்ட்ரான் மற்றும் மூங்கில் காடுகளின் ஊடாக நீலவானத்திலிருந்து வெள்ளி அருவியாக இறங்கும் நீர்விழ்ச்சிகளைக் கொண்டது.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தப் பதினோரு மொழிகள் ‘அரசுமொழிகள்” என்ற அந்தஸ்தில் உள்ளன.
நேப்பாளி
![]() |
#BHUTTIYA PEOPLE |
இங்கு அதிகம் பேசும் மொழி நேப்பாளி காரணம் இங்கு வசிக்கும் மக்களில் 80 சதவிகிதத்தினர் நேப்பாளியர்கள். நேப்பாள மொழி, முக்கியமான அலுவலக மொழி.
பூட்டியா
(
BHUTTIYA PEOPLE)
15 ம் நூற்றாண்டு வாக்கில் ‘திபேத்’தைச் சேர்ந்த பூட்டியா இன மக்கள் பூட்டியா என்னும் மொழியைப் பேசுகிறார்கள்.
![]() |
#LEPPACHA PEOPLE |
லெப்பச்சா
(LEPPACHA PEOPLE)
சிக்கிமின் மூன்றாவது முக்கிய மொழி லெப்பச்சா இவர்கள் ‘திபேத்திய பர்மிய’ இனத்து மக்கள். இவர்கள் பேசும் மொழி லெப்பச்சா என்பது ஆக நேப்பாளி, பூட்டியா, லெப்பச்சா, மற்றும் ஆங்கிலம் உட்பட பதினோரு மொழிகள் சிக்கிமின் அலுவலக மொழிகள்.
No comments:
Post a Comment